இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் விதிக்கப்பட்ட போது பங்குச்சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இந்தச் சரிவுக்குப் பின்பு அதிகளவிலான நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் துவங்கியது. இந்தத் தாக்கம் 2021ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 27,417 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஐபிஓ மூலம் இந்திய நிறுவனங்கள் ஈர்த்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராகியுள்ளது.
ஐபிஓ வெளியீடு
கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு 2021ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் சுமார் 27,417 கோடி ரூபாய் முதலீட்டை ஐபிஓ மூலம் இந்திய நிறுவனங்கள் ஈர்த்துச் சாதனை படைத்துள்ளது. 2020 முதல் 6 மாதத்தில் எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் மூலம் இந்திய நிறுவனங்கள் சுமார் 10,341 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூன் ஐபிஓ
ஜூன் மாதத்தில் ஷியாம் மெட்டாலிக்ஸ், டொட்லா டைய்ரி, KIMS, சோனா காம்ஸ்டார், இந்தியா பெஸ்டிசைட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ மூலம் முதலீட்டை ஈர்த்த நிலையில் ஜூலை மாதத்தில் சுமார் 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட தயாராகியுள்ளது.
6 முக்கிய நிறுவனங்கள்
சேமோட்டோ, கிளின் சைன்ஸ் & டெக்னாலஜி, கிளென்மார்க் லைப் சயின்ஸ், கிர்ஸ்னா (Krsnaa) டைக்னாஸ்டிக்ஸ், ஜீஆர் இன்பரா, ஸ்ரீராம் ப்ராபெர்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.
11 ஐபிஓ நிறுவனங்கள்
இதோடு தேவயானி இண்டர்னநேஷ்னல், பாராஸ் டிபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ், கோ ஏர்லைன்ஸ், செவன் ஐலேணட்ஸ் ஷிப்பிங் லிமிடெட், ஆதார் ஹவுசிங், ESAF ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட், ஸ்டெட்ஸ் ஆக்சசரீஸ் லிமிடெட் என 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட உள்ளது.
சோமேட்டோ ஐபிஓ
இதில் பெரிய நிறுவனம் என்றால் சோமேட்டோ தான், ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் முன்னோடியாக இருக்கும் சோமோட்டோ சுமார் 8,250 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனம்
மேலும் இந்தப் பங்குச்சந்தைக்கு வரும் முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனமான சோமேட்டோ இருக்கும் காரணத்தால், இந்நிறுவனத்தின் வெற்றி பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கு வருவதற்கு உந்து சக்தியாக இருக்கும்.
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்
இந்த ஐபிஓ வேட்டையில் ரீடைல் முதலீட்டாளர்கள் திட்டமிட்டு முதலீடு செய்வது மூலம் அதிகளவிலான லாபத்தைப் பெற முடியும். எனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications