இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11,00,000 பட்டதாரிகள் பட்டம் பெற்று கல்லூரி படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். ஆனால் ஐடி துறையில் பிரஷ்ஷர்களுக்கு அதிகப்படியாக 50,000 முதல் 1,00,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகள் தான் உள்ளன. இந்தச் சூழ்நிலையில் இஞ்சினியரிங் கல்வி சரிதானா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் ஐடி துறையானது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஒயிட் காலர் வேலைவாய்ப்பாக இருந்தது. ஆனால் இப்போது இந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் காணாமல் போய் வருகின்றன.

இன்போசிஸ் நிறுவனம் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வதற்காக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன. டிசிஎஸ், விப்ரோ, டெக் மகிந்திரா பிரஷ்ஷர்கள் ஊழியர்களை சேர்க்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
ஆனால் இந்த வேலை குறைப்பு அறிவிப்புகள் அடுத்த ஆண்டு பாஸ்அவுட் ஆகும் இஞ்சினியரிங் பட்டதாரிகளை மட்டும் பாதிக்கவில்லை. தற்போதையே பேட்சை சேர்ந்த பிரஷ்ஷர்களும் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
2021-23 பேட்சை சேர்ந்த லட்சக்கணக்கான பட்டதாரிகள் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா, கேப்ஜெமினி, காக்னிசன்ட், அக்சன்ச்சர் போன்ற நிறுவனங்களிடம் இருந்து வேலை வாய்ப்புகளை பெற்றனர்.
இருப்பினும் இந்த பட்டதாரிகள் வேலையில் சேர்வதற்கான நாளை எதிர்பார்த்து வீட்டில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வேலை நியமனக் கடிதங்களுடன் காத்திருக்கும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் தங்களை இன்னும் வேலையில் அமர்த்தவில்லை.
புதிய புராஜக்ட் வரும் வரை இந்த இஞ்சினிரியர்கள் காத்திருக்க வேண்டியது தான் என்று கம்பெனிகள் கூறுகின்றன. வேலையில் சேர்வதற்கான தேதி கூறப்பட்டபோதும் பல இஞ்சினியரிங் அதைச் செய்வதில்லை.
பெரிய ஐடி நிறுவனங்களில் கடந்த பத்தாண்டுகளில் ரூ.3,60,000 முதல் ரூ.4,00,000 வரை எந்தவித ஏற்றமும் இல்லாமல் இருக்கிறது. அதே சமயத்தில் சிஇஓ-க்களின் சம்பளம் 1500 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
ஆனால் புதிய ஊழியர்களுக்கு ஏன் ஐடி நிறுவனங்கள் நல்ல சம்பளம் தருவதில்லை என்று ஊழியர்கள் கேள்வி கேட்கின்றனர். புதிய ஊழியர்கள் தங்களது வேலைக்குத் தேவையான திறன்களை கொண்டிருக்காததால் அவர்களுக்கு செலவு செய்து பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது. இதனால் புதியவர்களுக்கு அதிக சம்பளம் தருவதில்லை என்று ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.
இது கம்பெனிக்கு கூடுதல் செலவை தருகிறது. எனவே இந்தச் செலவை புதிய ஊழியர்கள் மீது கம்பெனிகள் சுமத்துகின்றன. இந்தச் சூழ்நிலையில் கல்வி நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அல்லது கம்பெனிகள் தங்களது கொள்கைகளை புதிய ஊழியர்களுக்கு ஏற்ப மறுஆய்வு செய்ய வேண்டி இருக்கிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications