நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), உலகளாவிய அளவில் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்துள்ளது. இந்த முடிவால் ஐடி துறை ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த பணிநீக்க முடிவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள டிசிஎஸ் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், "டிசிஎஸ் நிறுவனம் இன்னும் ரத்தன் டாடாவின் தலைமையில் இருந்திருந்தால், இத்தகைய தீர்மானத்தை அனுமதித்திருப்பாரா..?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்து வருகிறது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. இவர், பணியாளர் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தவராக அறியப்பட்டவர். அவரின் நிர்வாகத்தில் மனிதநேயமும், நிறுவனத்தின் சமூக பொறுப்பும் முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தது.

இது சம்பந்தமாக, கொரோனா காலத்தில் ரத்தன் டாடா தெரிவித்திருந்த ஒரு முக்கியமான கருத்து மீண்டும் பேசப்பட்டு வருகிறது. அந்தக் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய போது, ரத்தன் டாடா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிப்பது என்பது ஒரு தலைவர் மனிதநேயம் இல்லாமல் நடந்துகொள்வதைக் காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார். மேலும், கடினமான சூழ்நிலைகளில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு, ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பது போன்றவற்றைப் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஏதேனும் ஒரு நிறுவனம் தன்னுடைய ஊழியர்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக இல்லாமலும், அவர்களின் நிலையை உணராமலும் செயல்பட்டால், அந்த நிறுவனம் நீண்ட காலம் நீடிக்க முடியாது. வணிகம் என்பது வெறும் லாபம் சம்பாதிக்க மட்டும் அல்ல.. அது நேர்மையான மற்றும் நெறிமுறைக்கேற்ப நகரும் பயணமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், "இவர்கள் உங்கள் நிறுவனத்துக்கு வாழ்க்கை முழுக்க சேவை செய்தவர்கள். அவர்களைத் திடீரென்று வெளியே தள்ளி, கஷ்டப்பட வைத்துவிடுகிறீர்கள். இதுவே உங்கள் 'நெறிமுறை' என்றால், அது என்ன முறை?" என்றும் அப்போது ரத்தன் டாடா கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் பலரும், ரத்தன் டாடா தலைமையில், இத்தகைய முடிவுகள் ஊழியர்களின் நலனைச் சிறப்பாகக் கவனித்துக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் என நம்புகின்றனர்.
இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசனுக்கு ரூ.26.5 கோடி ஊதியம் வழங்கப்பட்டதாகவும், அது கடந்த ஆண்டைவிட 4.6% அதிகமாக இருப்பதாகவும், வருடாந்திர அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் வெளிவந்தவுடன், சி.இ.ஓ.வின் ஊதியம், ஒரு சாதாரண ஊழியரின் ஊதியத்தை விட 329.8 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications