மும்பை: மும்பையில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கு பெரும்ப பணக்காரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
மும்பையில் ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிடத்தில் 60ஆவது தளத்தில் ஆடம்பரமான பல்வேறு நவீன வசதிகள் கொண்ட ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது .இந்த வீட்டின் விலை 14 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 120 கோடி ரூபாய் ஆகும்.

இந்த வீட்டினை அதன் உரிமையாளர் தற்போது விற்பனை செய்வதற்கு முன் வந்திருக்கிறார். இதனை வாங்குவதற்கு பெரும் பணக்காரர்கள் மத்தியில் பல போட்டி நிலவினாலும் சரியான நபரிடம் மட்டுமே இந்த வீட்டை விற்பனை செய்வேன் என அவர் கூறி வருகிறார்.
மும்பையின் லோயர் பரேல் பகுதியில் தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆறு படுக்கையறை கொண்ட இந்த இந்த வீட்டினை பார்ப்பவர்களுக்கு எல்லாம் உடனடியாக வாங்கி விட வேண்டும் என்று தான் தோன்றும்.
ஆனால் இந்த வீட்டின் உரிமையாளர் அத்தனை எளிதாக இதனை ஒருவருக்கு வழங்கி விட மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இந்த வீட்டை வாங்குபவர்களுக்கு என அவர் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை முன் வைத்திருக்கிறார். பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் கூட இந்த வீட்டினை வாங்க முன்வந்த நிலையில் அவர்களுக்கெல்லாம் இந்த வீட்டினை வழங்க மறுத்துவிட்டாராம்.
பணம் இருந்தால் மட்டும் இந்த வீட்டினை வாங்க முடியாது என இதன் உரிமையாளரான நிஷாந்த் அகர்வால் தெரிவித்துள்ளார். சரியான நபரிடம் மட்டுமே இதனை வழங்குவோம் இதனை வாங்க முன்வரும் நபரின் வருமானம் எப்படி இருக்கிறது, அவர் எந்த தொழிலில் ஈடுபடுகிறார் என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்த பின்னர் தான் நாங்கள் முடிவெடுப்போம் என கூறியுள்ளார்.
பாலிவுட் பிரபலங்களுக்கு இவ்வாறு வீடுகளை வாங்கி விற்பனை செய்யக்கூடிய முகவரான ரவி கேவல்ரமானி இந்த வீட்டினை வாங்குவதற்கு கடுமையாக முயற்சி செய்தாராம். ஆனால் அந்த உரிமையாளர் அதனை ஏற்கவில்லை எனவே மற்ற பிரபலங்களுக்கு இதனை வாங்கி வழங்குவதற்கு அவர் முயற்சி செய்து வருகிறாராம்.
இந்த வீட்டினை பொருத்தவரை கண்ணாடியால் ஆன எலிவேட்டர், மேற்கூரையில் நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் எட்டு வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஆகியவை இருக்கின்றன. குடும்பமாக வந்து தங்கக்கூடிய நபருக்கு இந்த வீட்டை வழங்க விரும்புவதாக அந்த உரிமையாளர் கூறுகிறார்.
மேலும் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீட்டுமருடன் சகஜமாக பழகும் நபராக இருக்க வேண்டும் தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது என்ற மனநிலையோடு இருப்பவர்களுக்கு வீடு கிடையாது என்றும் அதன் உரிமையாளர் கூறுகிறார்.
அக்கம்பக்கத்தில் குடியிருப்போருக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இந்த வீட்டினை வழங்குவதற்கு அவர் தயக்கம் தெரிவிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications