டெல்லி: உலகமே இணைய வலையில் விழுந்து கிடக்கிறது. இணையத்தை நம்பித் தான் எல்லாமே..! வீட்டில் சாதாரணமாக லைட், ஃபேன் சுவிட்ச் போடுவது தொடங்கி, உணவு சாப்பிடுவது வரை இணையம் இல்லாமல் சிரமம் ஆகிவிட்டது.
இப்படி எல்லாமே இணையம் ஆகிக் கொண்டிருக்கும் போது, நம் வங்கி பணப் பரிமாற்றங்கள் மட்டும், பழைய முறைப்படி நெட் பேங்கிங் எல்லாம் செய்து கொண்டு இருந்தால் போர் அடிக்காதா என்ன..? அப்போது தான் யூ பி ஐ (UPI - Unified Payements Interace) என்கிற புதிய ரக சேவையைக் கொண்டு வருகிறது என் பி சி ஐ (NPCI - National Payment Corporation of India).

ஒரு ஸ்மார்ட்ஃபோன் + வங்கிக் கணக்கு விவரங்கள் ஏடிஎம் கார்ட் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம், பணத்தைப் பெறலாம். அந்த அளவுக்கு முன்னேறிவிட்டது.
இப்போது இந்த யூ பி ஐ பேமெண்ட்டே ஒரு பெரிய சாதனை படைத்து இருக்கிறது. கடந்த நவம்பர் 2019-ல் ஒரே மாதத்தில் 1.2 பில்லியன் (120 கோடி) பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம். இதை என் பி சி ஐ அமைப்பே இன்று உறுதி செய்து இருக்கிறது.
நவம்பர் 2018-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளுடன், நவம்பர் 2019-ல் நடந்த யூ பி ஐ பணப் பரிவர்த்தனைகளை ஒப்பிட்டால் இது 132 சதவிகிதம் பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுவே அக்டோபர் 2019 உடன் ஒப்பிட்டால் அது 6.1 சதவிகிதம் கூடுதல் பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறது. எவ்வளவு பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறது...? என்றால்... கடந்த நவம்பர் 2019-ல் 1.89 லட்சம் கோடி ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டு இருக்கிறது.
இப்போது வரை இந்த யூ பி ஐ சேவையில் மொத்தம் 141 வங்கிகள் இருக்கின்றனவாம். தற்போது யூ பி ஐ சேவையை 10 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். அடுத்த 3 வருடத்துக்குள், யூ பி ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம் என்கிறார்கள் என் பி சி ஐ தரப்பினர்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications