இன்றைய டிஜிட்டல் உலகில் மோசடிகள் அதிக அளவில் நடக்கின்றன. இதன் காரணமாக உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி காவல்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். சாதனங்கள், பேங்கிங் அப்ளிகேஷன்கள் போன்றவற்றிற்கும் ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளை உபயோகிக்க பரிந்துரைக்கின்றனர்.ஆனால் இன்னமும் சிலர் எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளக்கூடிய பாஸ்வேர்டுகளை தான் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் குறித்த அறிக்கையை நோர்ட்பாஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
அதில் இந்த வருடம் பயன்படுத்தப்பட்ட 200 பொதுவான பாஸ்வோர்ட் குறித்த விவரங்களை வெளியிட்டது. நோர்ட்பாஸ் நிறுவனம் 44 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் "123456" ஆகும்.

உலக அளவில் "123456" என்ற பாஸ்வேர்டை பயன்படுத்திய 3,018,050 பயனர்களில் 76,981 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி மதிப்பிட்டுள்ளது. அதேபோல உலக அளவில் இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் 123456789. இந்த பாஸ்வேர்ட் நான்காவது இடத்தில் உள்ளது. 123456 பாஸ்வேர்டுக்கு பிறகு இந்த பாஸ்வேர்டையும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
நோர்டு ஸ்டெல்லர் என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பொதுவான பாஸ்வோர்ட்களில் "qwerty", "1q2w3e4er5t" மற்றும் "123456789" போன்ற சில எளிதான கீபோர்டு பட்டன்களை இணைக்கும் பாஸ்வேர்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கீபோர்டில் எளிதாக வரிசையாக இருக்கும் பட்டன்களையே பாஸ்வேர்டாக பலர் பயன்படுத்தியுள்ளனர்.
நோர்ட்பாஸின் ஆய்வின்படி ஒரு பயனர் தங்கள் தனிப்பட்ட அக்கவுண்டுகளுக்காக சராசரியாக 168 பாஸ்வேர்டுகளையும், தங்களின் அலுவலகப் பணிகளுக்காக சுமார் 87 பாஸ்வேர்டுகளையும் வைத்திருக்கின்றனர். இதில் பல பாஸ்வேர்டுகள் இருப்பதால் அவற்றை மனதில் கொள்வது சிரமமாக உள்ளது. இதன் காரணமாகவே பொதுவாக பயன்படுத்தப்படும் பிரேஸ் (Phrase) அல்லது நம்பர்களை பயன்படுத்துகின்றனர். அவை நினைவில் கொள்ளவும் எளிதாக உள்ளது. இங்குதான் பிரச்சனை.. இப்படி நினைவில் கொள்வதற்காக அமைக்கப்படும் பாஸ்வேர்ட் எளிதில் ஹேக் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
இணைய பயனர்கள் எளிதான எண்களை அல்லது ஆல்ஃபபெட்களை பயன்படுத்த வேண்டாம் என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் அவை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஹேக் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ஆனால் உலக அளவில் மில்லியன் கணக்கானவர்கள் இன்னும் "qwerty123" என்ற பாஸ்வேர்டைத் தான் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் பாஸ்வேர்டுக்கு "password" என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்துகின்றனர். கலந்த சில ஆண்டுகளில் இந்த சொற்றொடர் மிகவும் பிரபலமான பாஸ்வேர்டாக மாறிவிட்டது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பாஸ்வேர்டாக password உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டமில் வாழும் மக்களும் இதே பாஸ்வேர்டை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
நோர்ட்பாஸ் நிறுவனம் இது போன்ற எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய பாஸ்வேர்ட் ஒரு வினாடிக்குள் ஹேக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளது. தனி நபர்கள் மற்றும் வணிகர்களில் 40% பேர் ஒரே மாதிரியான பாஸ்வோர்ட்களை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. அதிலும் சில வணிகர்கள் "newmember," "newpass," "newuser", "welcome" போன்ற பாஸ்வேர்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் 10 பாஸ்வேர்ட்கள்: 123456, password, 12345678, 123456789, abcd1234, 12345, qwerty123, 1234567890, india123, 1qaz@wsx
இதுபோன்ற பாஸ்வோர்ட்களை உபயோகிப்பதால் எளிதில் உங்களுடைய தகவல் திருடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பர் ஆல்ஃபபெட்கள் ஸ்பெஷல் கேரக்டர்கள் போன்றவற்றைக் கொண்டு பாஸ்வோர்ட் உருவாக்குவது, உங்களுக்கு எந்தவித இழப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். அதோடு பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தடுக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications