நியூயார்க் நகரம் சலசலப்புக்கும், பரபரப்புக்கும் பெயர் பெற்ற பெருநகரம் இது ஒருபக்கம் தான், ஆனால் இந்நகரத்தில் வாழும் பெரும்பாலானோர் தனிமை மற்றும் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர் என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக இளம் வயதியிலேயே வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தேட துவங்கிய பலரும் தனிமை என்பதை கொடுமையான விஷயமாக பார்க்கின்றனர்.

லட்ச கணக்கான மக்கள் வாழும் கான்கிரீட் காடுகளுக்கு மத்தியிலும், கரியர், பிஸ்னஸ் என ஓட வேண்டிய இக்கட்டான நிலையில் பல இளம் தலைமுறையினர் சக மனிதர்கள் உடனான இணைப்பை அதிகம் தேடி வருகின்றனர். இதன் வாயிலாக நியூயார்க் நகரத்தில் touch therapy, கட்டிபுடி வைத்தியம் என்பதும் cuddling சேவைகளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.
நியூயார்க்கில் ஓவிய ஆசிரியராக இருந்த ELLA என்பவர் இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் உருவான தனிமையை கவனித்து முழுநேர தொடு சிகிச்சை நிபுணராக மாறினார். கட்டிபுடி வைத்தியம் என்றாலே தவறான தொழில் என்பதை தாண்டி தற்போது இது தனிமையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு ப்ரொபஷனல் சேவையாக மாறியுள்ளது.
ELLA-விடம் touch therapy எனப்படும் தொடு சிகிச்சை பெறுவோருக்கு கைகளை பிடித்துக்கொள்ளவும், தங்கள் மனதில் இருப்பதை பகிரவும், ஆறுதலான அரவணைப்பையும் வழங்குகிறார். ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 டாலர் தொகையை கட்டணமாக வசூலித்து வருகிறார். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12500 ரூபாய்.
ELLA அளிக்கும் ப்ரொபஷனல் கட்டிபிடி வைத்தியத்திற்கு பெயர் "கேதர்டிக் கேர்" என்று அழைக்கிறார். அவர் தனது கைகளை அகலமாகத் திறந்து தனது வாடிக்கையாளர் அரவணைக்கிறார். இவருடைய சேவையை பெறுவோர் துவக்கத்தில் 40 முதல் 60 வயதான திருமணமான ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில் சமீபத்தில் GEN Z தலைமுறையின் பெண்கள் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். GEN Z தலைமுறை எனில் அதிகப்படியாக 22 வயது இருக்கும்.
ELLA தனது பணியை 2017ல் ராஜினாமா செய்து விட்டு இந்த தொடு சிகிச்சை மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை அளித்து வருகிறார். இதற்காக Cuddlist's certification-ஐ பெற்றுள்ளதாக கூறுகிறார். மேலும் தொடு சிகிச்சை மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை பெறுவோர் அவர்களது வீட்டில் தான் பெறுவதாகவும் ELLA கூறுகிறார்.
தன் விருப்பத்தின் காரணங்களுக்காக தனது கடைசிப் பெயரை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்பும் எல்லா, தொழில்முறை கட்லர்களின் வளர்ந்து வரும் தொழில்துறையின் ஒரு பகுதியாகும். அவரது பூடோயர் ஒரு சரணாலயமாக செயல்படுகிறது, அங்கு வாடிக்கையாளர்கள் தலை-மார்பு முதல் நேருக்கு நேர் அரவணைப்பது வரை எண்ணற்ற பின்னிப்பிணைப்புகளை அனுபவிக்கிறார்கள்.
இத்தகைய சேவை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..? இளம் தலைமுறையினர் அதிகப்படியாக தனிமையை உணர்வது குறித்த உங்கள் கருத்து என்ன..?


Click it and Unblock the Notifications