வெற்றிகரமான பல தொழிலதிபர்களின் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்தால், அவர்கள் கடந்த பாதையில் கடுமையான போராட்டங்களை சந்தித்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு தொழிலதிபர்தான் மும்பையை சுஷில் சிங்.
கல்வில் ஆர்வம் இல்லை, மாதம் ரூ.11,000 சம்பளத்தில் வேலை பார்த்த சுஷில் சிங் இன்று 3 நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் மற்றும் கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜான்பூரை சேர்ந்தவர் சுஷில் சிங். இவரது குடும்பத்தினர் பல குடும்பங்கள் வாழும் ஒரு குடியிருப்பில் வாழ்ந்தனர்.

சுஷில் சிங்கின் தந்தை ஒரு வங்கியின் காவலாளியாகவும், அவரது தாயார் ஒரு இல்லத்தரசியாகவும் இருந்தார். குறைந்த வருமானம் கொண்டு குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளியில் அவர் படித்தார். கடமையே என்று விருப்பம் இல்லாமல் படித்தார். இதனால் படிப்பில் ஆர்வம் குறைந்து 12ம் வகுப்பில் பெயில் ஆனார்.
இருப்பினும் அடுத்த ஆண்டு கஷ்டப்பட்டு ஒரு மாதிரி 12ம் வகுப்பு பாஸாகி விட்டார். பள்ளிபடிப்பை முடித்தவுடன் அலகாபாத் பல்லைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியில் படிப்பில் சேர்ந்தார். ஆனால், வழக்கம் போல் கல்வியில் ஆர்வம் இல்லாததால், இரண்டாம் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார்.
பின்னர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு டெலிகாலர் மற்றும் விற்பனையாளர் வேலைகளை பார்த்தார். இந்த வேளையில் அவருக்கு சம்பளமாக ரூ.11,000 மட்டுமே கிடைத்ததது. இருப்பினும் சிறிது காலம் அந்த வேலையை பார்த்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், சாப்ட்வேர் என்ஜினீயரான சரிதா ராவத்தை திருமணம் செய்தார். மனைவி வந்த பிறகு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்வதே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது சுஷில் சிங் விஷயத்தில் உண்மையாக அமைந்தது. அவர் தனது மனைவியுடன் சேர்ந்து நொய்டாவில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து பிபிஓவை தொடங்கினார். இங்குதான் எஸ்.எஸ்.ஆர். டெக்விஷன் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க நிறுவனத்துடன் 3 முதல் 4 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த பிறகு, நொய்டாவில் அவருக்கு அலுவலக இடத்தை பகிர்ந்து பணிபுரியும் இடம் கிடைத்தது. அவரது வர்த்தகம் நன்றாக வளர்ச்சி காண தொடங்கியது. இரண்டரை ஆண்டுகள் கழித்து நொய்டா கட்டிடம் முழுவதையும் வாங்க முடிவு செய்தார்.
அதன் பிறகு டீபாகோ நிறுவனத்தை தொடங்கினார். இது சர்வதேச B2C ஆன்லைன் துணிக்கடையாகும். இந்நிறுவனம் லாபத்தில் இயங்கியது. இதனையடுத்து 2019ல் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான சைவா சிஸ்டம் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
சுஷில் சிங் இன்று எஸ்.எஸ்.ஆர். டெக்விஷன், டீபாகோ மற்றும் சைவா சிஸ்டம் ஆகிய 3 நிறுவனங்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார். ஆயினும் அவர் இந்தநிலையை அடைய சென்ற பாதை போராட்டம் நிறைந்தது. மாதம் ரூ.11,000 சம்பளத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய சுஷில் சிங் இன்று கோடிகளில் சம்பாதிக்கிறார். மேலும் NGOவையும் நிறுவி நடத்தி வருகிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications