கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து பல்வேறு கட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுத் தொற்றின் அளவை கட்டுப்படுத்தி வர முயற்சி செய்யப்பட்டாலும் தினமும் கொரோனாவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் தற்போது அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசானுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் அமேசான் நிறுவன பங்குகளின் அதீத வளர்ச்சியின் மூலம் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ்-ன் சொத்து மதிப்பு ஓரே நாளில் சுமார் 13 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
அமேசான் வர்த்தகம்
அமெரிக்காவில் 2019 டிசம்பர் மாதம் கொரோனா தொற்றின் வீரியம் அதிகமான காரணத்தால் அனைத்து விதமான வர்த்தகமும் முடங்கியது. இதனால் அதிகளவிலான வர்த்தகச் சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் பல்வேறு வர்த்தக முறைகளையும், வர்த்தக வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன விளைவாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பங்கு வளர்ச்சி
கொரோனா தொற்றின் பாதிப்பால் அமெரிக்காவில் இணைய ஷாப்பிங் வழக்கும் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக அமேசான் நிறுவன பங்குகள் 2020ல் மட்டும் சுமார் 73 சதவீத வளர்ச்சியையும், திங்கட்கிழமை ஒரு நாள் வத்தகத்தில் மட்டும் சுமார் 7.9 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
வரலாற்று நிகழ்வு..!
திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தக வளர்ச்சியின் மூலம் அமேசான் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ்-ன் சொத்து மதிப்பு ஓரே நாளில் 13 பில்லியன் டாலர் அளவிலான உயர்வை சந்தித்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் பட்டியல் துவங்கப்பட்ட 2012ஆம் ஆண்டில் இருந்து ஓரே நாளில் அவ்வளவு பெரிய வளர்ச்சியை யாரும் பெறவில்லை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்த சொத்து மதிப்பு
இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் 56 வயதான ஜெப் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 189.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, 2020ல் மட்டும் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 74 பில்லியன் டாலர் அளவில் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த அமெரிக்காவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் ஜெப் பெசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
மெக்கென்சி பெசோஸ்
இதேபோல் விவாகரத்து ஒப்பந்தம் மூலம் ஜெப் பெசோஸ் மனைவி மெக்கென்சி பெசோஸ், தன் முன்னாள் கணவர் கையில் இருந்து அமேசான் பங்குகளில் 25 சதவீதம் பெற்ற நிலையில் திங்கட்கிழமை அதிரடி வர்த்தக வளர்ச்சியில் அவரின் சொத்து மதிப்பு 4.6 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 62.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications