13 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் முடக்கம்.. அலறும் மக்கள்..!!

இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் 4வது பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசம், தமிழ்நாட்டுக்கு இணையாக 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை அம்மாநில யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிர்ணயம் செய்து இயங்கி வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேச அரசு அடிப்படையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் அதன் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு துறை வளர்ச்சியைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மாநிலத்தின் வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் பல நடவடிக்கை எடுத்தாலும், அதன் நிர்வாகத்தையும், செலவுகளையும் சீர்படுத்தக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஒன்று தான் 13 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் முடக்க நடவடிக்கை.

13 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் முடக்கம்.. அலறும் மக்கள்..!!

உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசுக்கு முறையாக அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றத் தவறினால் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத சம்பளத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் எனத் தெரிகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுமார் 17.88 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளனர், ஆனால் 26 சதவீதம் பேர் மட்டுமே அரசு போர்ட்டலான மனவ் சம்பதாவில் (Manav Sampada) தங்களுடைய சொத்துக்களை அறிவித்துள்ளனர் என்று NDTV தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ளவர்கள் ஆகஸ்ட் 31குள் அரசின் விதிமுறைக்கு இணங்க சொத்து விபரங்களைக் கொடுத்தால் மட்டுமே இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் கூறினார்.

இதுகுறித்து உச்சரபிரதேச அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், "இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஊழலுக்கு எதிராக zero-tolerance கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம்" என்று கூறினார்.

மேலும் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் வர்மா கூறுகையில், உச்சரபிரதேச அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார். "இது ஏன் 2017 இல் அறிமுகப்படுத்தப்படவில்லை? யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தங்கள் ஆட்சியை பாதுகாக்கும் நிலையில் உள்ளது, தங்கள் ஊழியர்கள் ஊழல் செய்வதை உணர்ந்தது மூலம் கண்துடைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது." என்று அசுதோஷ் கூறினார்.

இந்தியா முழுக்க இப்படியொரு திட்டம் கொண்டு வந்தால் எப்படியிருக்கும்..? உங்கள் கருத்தை கமெண்ட் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+