சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தில் ரஜினிகாந்தின் பேரனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரித்விக் ஜோதி ராஜ். யூடியூபில் பிரபலமான ரித்விக் தனது நடிப்பை தாண்டி, கோடிங் உள்ளிட்டவற்றை கற்று கொண்டு அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
ரித்து ராக்ஸ் என்ற யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு பிரபலமான சிறுவன் தான் ரித்விக். இவர் நடிகர் ரஜினிகாந்தின் பேரனாக ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் துல்கர் சல்மான் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஜெயிலர், லக்கி பாஸ்கர், ஆக்ஸிஜன், சர்தார் என ரித்விக் நடித்த படங்களும் சரி, யூடியூப் வீடியோக்களும் சரி செம ஹிட்.

தற்போது ஜெயிலர் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரித்விக் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 13 வயதாகும் ரித்விக், நடிப்பு மற்றும் படிப்பை தாண்டி சொந்தமான நிறுவனம் நடத்துவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நானும் நண்பர்களும் போர் அடிக்கும் போது என்ன செய்வது என யோசித்தோம். எங்களுக்கு கொஞ்சம் கோடிங் தெரியும் என்பதால், அதை கொண்டு முயற்சித்து பார்க்கலாம் எனறு முடிவு செய்தோம். அப்படி ஒரு இணையதளத்தை உருவாக்கினோம் என கூறியுள்ளார். தனக்கு பைத்தான் தெரியும் என கூறும் அவர் ரோபோக்களை உருவாக்குவதிலும் தனக்கு ஈடுபாடு உள்ளதாக தெரிவித்தார்.
தங்கள் நிறுவனத்தின் இணையதளம் மூலம் சில பொருட்களை விற்பனை செய்வதாகவும், சில படிப்புகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது எங்கள் வலைத்தளத்திற்கு பெரிய அளவில் பார்வையாளர்கள் யாரும் வருவதில்லை, என்றாலும் அதை தொடர்ந்து இயக்கி வருகிறோம் என தெரிவித்தார். எங்கள் நிறுவனத்தில் முக்கியமாக நாங்கள் 5 பேர் பார்ட்னர்களாக இருக்கிறோம். அதோடு, உறுப்பினர்கள் என்ற முறையில் உதவக்கூடிய மேலும் 5 பேர் குழுவில் உள்ளனர் என கூறினார்.
கோயம்புத்தூரை சேர்ந்த ரித்விக் , தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பால் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். சினிமா பின்னணி கிடைத்திருந்தாலும் அதனை மட்டுமே சார்ந்திருக்காமல் அதாவது நடிப்பதுடன் நில்லாமல் கோடிங், ரோபோடிக்ஸ் மற்றும் சொந்தமாக ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி தொழில்நுட்ப துறையிலும் சாதிக்கும் நோக்கத்துடன் படித்து வருவது பலருக்கும் ஒரு முன் உதாரணமாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications

