சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையில் பெரும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 132 சார்-பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் பதிவுத்துறையில் நிர்வாக திறன் மேம்படுத்தவும் மற்றும் ஊழலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிவுத்துறை சார்-பதிவாளர்கள் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றினால், உள்ளூரில் நெட்வொர்க் உருவாகி, சொத்து பதிவுகளில் ஊழல் செய்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும் என்பது அரசின் நிலைப்பாடக உல்ளது. இதைத் தடுக்க, அடிக்கடி இடமாற்றம் செய்யும் கொள்கையை அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த முறை 132 அதிகாரிகளின் மாற்றம் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
இதேபோன்ற நடவடிக்கையை சென்னை பெருநகர நிர்வாக துறையிலும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் 132 அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டது குறித்து தெரிவித்த போது, இந்த இடமாற்றம் நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் பதிவு அலுவலகங்கள் மேலும் வெளிப்படையாகவும், திறமையாகவும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு நேர சார்-பதிவாளர்கள் நியமனம்
இந்த இடமாற்றத்துடன், பதிவுத்துறையில் பொறுப்பு சார்-பதிவாளர்கள் இருந்த இடங்களில் முழு நேர சார்-பதிவாளர்களை நியமிக்கும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. இது பதிவு பணிகளை விரைவுபடுத்தவும், தாமதங்களைத் தவிர்க்கவும் உதவும்.
இந்த மாற்றங்கள் சொத்து பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும். ஊழல் குறைந்து, பதிவு செயல்முறை வேகமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும். குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசின் நிர்வாக சீர்திருத்த முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications