இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல் முதலீட்டுச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இஸ்ரேல் லெபனான் பகுதியில் காலையிலேயே தாக்குதலைத் துவங்கியது, இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்ததோடு, மீண்டும் வளைகுடா போர் வருமா என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய முதலீட்டு சந்தைகள், குறிப்பாக இந்திய பங்குச்சந்தை, பெரும் சரிவை இன்று சந்தித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சப்ளை செயினில் ஏற்படும் தாக்கம், அதோடு சீன பங்குச்சந்தையில் குவியும் முதலீட்டின் போக்கு ஆகியவை இன்று சென்செக்ஸ் குறியீட்டை சுமார் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவடையக் காரணமாக இருந்தது.

இந்த இக்கட்டன சூழ்நிலையில் இஸ்ரேலில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், இஸ்ரேல் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இயக்கும் இந்திய நிறுவனங்கள் என பல இந்திய நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இஸ்ரேல் இயங்கும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இன்றைய வர்த்தகத்தில் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் முக்கியமான துறைமுகத்தில் ஒன்றான ஹைஃபா துறைமுகத்தைச் சொந்தமாகக் கொண்ட அதானி போர்ட்ஸ்-ன் பங்கு மதிப்பு இன்று 2.5% வரை குறைந்தது. இஸ்ரேலில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கொண்டுள்ள மற்றொரு இந்திய நிறுவனமான சன் ஃபார்மா, அதன் பங்குகள் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தன.
ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்கள் டாக்டர் ரெட்டி மற்றும் லுபின் ஆகியோரும், இஸ்ரேலின் மருந்துத்துறை, குறிப்பாக டாரோ-வின் (Taro Pharmaceutical ) மீதான அவர்களின் முதலீட்டின் காரணமாக இந்நிறுவனங்கள் தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
இதேபோல் என்எம்டிசி சுரங்கம் மற்றும் கல்யாண் ஜூவல்லரிஸ், டைட்டன் ஆகிய நகை நிறுவனங்களும் இஸ்ரேல் நாட்டில் சிறிய அளவிலான வர்த்தகத்தையும் கட்டமைப்புகளையும் வைத்துள்ளது.
மேலும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற ஐடி சேவை நிறுவனங்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் லார்சன் & டவுப்ரோ (L&T) ஆகிய நிறுவனங்களும் இஸ்ரேல் நாட்டில் வர்த்தகம் செய்து வருகிறது
இப்படி இஸ்ரேல் நாட்டில் துறைமுகம், பார்மா, சுரங்கம், நகை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள 14 இந்திய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் பாதிக்குமான என்ற அச்சத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இன்று லெபனான் நாட்டில் தரைவழி தாக்குதல்களையும், வான்வழி தாக்குதல்கள்களையும் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளைக் குறிவைத்துத் தாக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் வெறுமென எரிபொருளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது, பெயிண்ட் மற்றும் டயர் உற்பத்திக்கும் மூலப்பொருளாக உள்ளது. இதனால் இந்தியாவில் செயல்படும் ஆசியன் பெயிண்ட்ஸ், பெர்ஜர் பெயிண்ட்ஸ், அப்போலோ டயர்ஸ், MRF மற்றும் JK டயர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications