2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் அனைத்து முன்னணி டெக் சேவை நிறுவனங்களும் வர்த்தகப் பாதிப்பு, முதலீடு ஈர்ப்பதில் தோல்வி, நிதி ஆதாரம் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பெரிய ஆபத்து இருக்காது என நம்பியது.
ஆனால் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் அடுத்தடுத்துப் பணிநீக்கத்தை அறிவித்த காரணத்தால், ரெசிஷன் அச்சத்தால் இந்திய நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யத் துவங்கியது.
சர்வதேச நிறுவனங்களின் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 2000க்கும் அதிகமாக ஊழியர்களை 20 நாட்களில் பணிநீக்கம் செய்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
2022 ஆம் ஆண்டில் பணம் இல்லாமல் தான் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட நிலையில் 2023 ஆம் ஆண்டில் போதுமான நிதி ஆதாரம் இருக்கும் ஸ்டார்அப் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்துள்ளது.
டிஜிட்டல் சேவை துறை
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 3 வாரத்தில் மட்டும் 2100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் EDTECH துறை மற்றும் பிற டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காப்பாற்ற 1060 ஊழியர்களை மட்டுமே பணிநீக்கம் செய்த நிலையில், 2023 முதல் 3 வார எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.
2023 பணிநீக்கங்கள்
2023 ஆம் ஆண்டில் Medibuddy - ஊழியர்கள், ஸ்விக்கி - 380 ஊழியர்கள், Hubilo - 35 ஊழியர்கள், sharechat - 600 ஊழியர்கள், Relevel - 40 ஊழியர்கள், Rebel foods - 50 ஊழியர்கள், ola - 200 ஊழியர்கள், Skit.ai - 115 ஊழியர்கள், டன்சோ - 90 ஊழியர்கள், lead - 60 ஊழியர்கள், bounce - 50 ஊழியர்கள், Moglix - 200 ஊழியர்கள், harappa - 75 ஊழியர்கள், upscalio - 40 ஊழியர்கள், Inmobi - 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2022 ஆம் ஆண்டில் என்ன நடந்தது..?
2022ல் என்ன நடந்தது
உலக நாடுகளில் மத்திய வங்கிகள் பணவீக்கத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகளவில் உயர்த்தியது. இதனால் சந்தையில் பணப்புழக்கம் குறைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் புதிய முதலீடுகள் செய்வதைப் பெரிய அளவில் குறைத்தது.
18000 ஊழியர்கள் பணிநீக்கம்
இதன் எதிரொலியாக 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 52 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் funding winter-ல் மாட்டிக்கொண்டு சுமார் 17,989 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
முக்கியத் துறைகள்
எட்டெக், கன்ஸ்யூமர் சர்வீசஸ், ஈகாமர்ஸ், ஹெல்த் டெக், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக், என்டர்பிரைஸ் டெக், மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட், அக்ரிடெக், கிளீன்டெக் எனப் பல துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து சுமார் 18000 ஊழியர்களை 2022 ஆம் ஆண்டில் மட்டும் பணிநீக்கம் செய்துள்ளது.
Edtech துறை கடுமையான பாதிப்பு
2022 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நடந்த 18000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் 44 சதவீத பணிநீக்கம் எட்டெக் (Edtech) துறையில் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது. Byju's, Unacademy, Vedantu, பைஜூஸ் கைப்பற்றிய WhiteHat Jr, Toppr, Practically, FrontRow, Lido, Invact Metaversity, Yellow Class, Teachmint, Lead, Udayy, Crejo.Fun மற்றும் Eruditus ஆகிய 15 நிறுவனங்கள் இந்த 44 சதவீத பணிநீக்கத்தைச் செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications