இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூவை தலைமையிடமாக கொண்டு விப்ரோ லிமிடெட் (Wipro Limited) செயல்பட்டு வருகிறது. இது பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது தகவல் தொழில்நுட்பம் (IT), வணிக செயல்முறை சேவைகள் (Business process services), ஆலோசனைகள் (Consulting services) மற்றும் டிஜிட்டல் சேவைகளை (Digital services) வழங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய 6 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும். விப்ரோ நிறுவனத்தை பொறுத்தவரை புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப தங்களது சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் 3-வது பெரிய ஐடி நிறுவனமாக இருந்தது. மேலும், விப்ரோ நிறுவனம் மார்ச் 2025 காலாண்டில் ரூ.3,570 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. பல நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள நிலையில், விப்ரோ நிறுவனம் அதிக நிகர லாபத்தை பதிவு செய்து எப்போதும் தனித்து நிற்கிறது.

இந்த சூழலில் தான், விப்ரோ நிறுவனத்தில் "டெவலப்பர்" பணிக்காக இளம்பெண் ஒருவர் 14 நேர்முகத் தேர்வுகளை கடந்து வந்ததாக கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலரிடையே விவாதத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. விப்ரோவில் வேலை வாங்கியது தொடர்பாக அந்தரா மண்டல் (Antara Mandal) என்ற அந்த பெண், இன்ஸ்டாகிராம் மற்றும் Threads-இல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் விப்ரோ வளாகத்தில் நிறுவனத்தின் லோகோவை சுட்டிக் காட்டும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், அலுவலகத்தின் அடையாள அட்டையின் படமும் உள்ளன. இதை அந்நிறுவனத்தில் வேலை பெற்றதற்கான ஆதாரமாக பலர் எடுத்துக் கொண்டனர்.
மேலும், இந்த வேலை தனக்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை என Antara Mandal கூறியுள்ளார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், இறுதியாக சாதித்துவிட்டேன். விப்ரோ நிறுவனத்தில் டெவலப்பர் பணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் இனி என்னுடைய சொந்த சூரிய ஒளியை உருவாக்குவேன். கனவுகள் என்பது நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல.. உங்களை தூங்க விடாதவை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த டெவலப்பர் வேலை 14 சுற்று நேர்முகத் தேர்வுகளுக்குப் பின் கிடைத்ததாக கூறியுள்ளார்.
Antara Mandal-இன் இந்தப் பதிவில் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பதவிக்காக இத்தனை சுற்று நேர்முகத் தேர்வுகள் நடக்குமா..? என கேட்டு கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர், இதை எங்களால் நம்ப முடியவில்லை.. காமெடியாக இருக்கு என விமர்சித்துள்ளனர். இன்னொருபக்கம், பலரும் நேர்முகத் தேர்வுத் துறையின் முறைகள் குறித்தே கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
Antara Mandal இதற்கு முன்னதாக Bajaj Housing Finance Limited-இல் பணியாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது வைரலாகும் புகைப்படங்களில் அவர் மஞ்சள் நிற டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்த நிலையில், Wipro-வின் ID கார்டை அவர் கழுத்தில் போட்டுள்ளார். அதோடு, அலுவலக வளாகத்தைப் போன்று தோன்றும் இடத்தில் எடுத்த பல புகைப்படங்களும், அவர் அங்கு பணியாளராகவோ அல்லது விருந்தினராகவோ இருந்திருக்க வாய்ப்பு இருப்பதை குறிக்கின்றன.
மேலும், இதைப் பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர், "முதலில் நீங்கள் எந்தச் சுற்று பற்றிப் பேசுகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஏனென்றால் இங்கு அனைவரும் வேலைக்கு 2 அல்லது 3 சுற்றுகள் மட்டுமே தேவை என்று கூறுகிறார்கள்" என்றும் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பயனர், விப்ரோ நிறுவனத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 சுற்றுகள் மட்டுமே நேர்காணல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மற்றொருவர், 14 சுற்றுகள் நேர்காணல்.? அதுவும் டெவலப்பர் பணிக்கா..? ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications