இந்தியாவில் அதிக சொத்துள்ள நபர்களில் (ultra-high net worth individuals) குறைந்தது 14% பேர் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதன் படி, ஆசிய பசிபிக் பகுதியில் அதிக செல்வந்தர் கிளப்பில் இந்தியா நான்காவது இடத்திற்கு வந்துள்ளதாக, சர்வதேச சொத்து ஆலோசகரான நைட் ஃபிராங்க் சமீபத்தில் Attitudes Survey 2021 என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மிக உயர்ந்த சொத்துள்ள தனி நபர்களில் சுமார் 56% பேர் தங்களது சொந்த வணிகம் மூலம் செல்வத்தினை பெறுவதும் தெரிய வந்துள்ளது. இதே 14% இந்தியர்கள் தங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருந்து செல்வம் சேர்ப்பதாக என தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து நைட் பிராங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக இயக்குனருமான ஷிஷிர் பைஜால் கூறுகையில், இந்தியாவில் UHNWI பட்டியலில், உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே, பெரும்பாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருப்பதால், இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளது. ஆக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களில் முக்கிய நிர்வாக பதவிகளில் இந்தியர்கள் வலுவான போட்டியாளர்களாக உள்ளனர்.
இதே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிங்கப்பூரில் அதிக சொத்து மதிப்புள்ள சம்பளம் பெறும் ஊழியர்களில் (UHNWIs ) 31% பேர் இருப்பதாகவும், பிலிப்பைன்ஸில் 18% பேரும், சீன மெயின்லேண்டில் 16%, இந்தியாவில் 14% பேரும், ஹாங்காங்கில் 13% பேரும் உள்ளனர்.
ஆக மொத்தத்தில் இந்த லிஸ்டில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 29%, ரஷ்யா 25%மும், கனடா 22%மும், சுவிட்சர்லாந்தில் 22% பேரும் அதிக சொத்து மதிப்புள்ள சம்பளம் பெறும் ஊழியர்களாக உள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications