"எல்லாவற்றுக்கும் மேல் ஒரு சக்தி உண்டு என்று ஒப்புக் கொள், அறிந்து கொள் என அதட்டுவர் அவர். பகுத்தறிந்து சக்தியை பட்டியலிட்டு ஒன்றன் மேல் ஒன்று அடுக்கினால்... உச்சியில் ஒர் சக்தி நிச்சயம் உண்டு" என மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தசாவதாரத்தில் சொல்லி இருப்பார்.
இன்று உண்மையாகவே அப்படி சக்திகளைப் பட்டியல் போட்டால் அதில் கூகுலாண்டவருக்கும் ஒரு தனி இடம் உண்டு. ஆண்டவருக்கு இந்த அண்ட சராசரத்தைப் பற்றித் தெரியாதது என்ன இருக்கிறது. அவர் கொடுக்கும் ஞானப் பாலைத் தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கூகுளாண்டவர் கலிபோர்னிய கைலாயத்தில் குடி இருக்கிறார். இந்த கூகுளாண்டவரின் தாய் (நிறுவனம்) அல்ஃபபெட் (Alphabet). சில தினங்களுக்கு முன்பு தான், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய இருவரும் பதவி விலகினார்கள்.
சுந்தர் பிச்சை
நம் சென்னைவாசி சுந்தர் பிச்சை செவனே... என கூகுள் நிறுவனத்தை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டு இருந்தார். "மாப்ள சுந்தர் அப்படியே அல்ஃபபெட் நிறுவனத்தையும் பாத்துக்கயா. நாங்க கெளம்புறோம்.." என அல்ஃபபெட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்புகளை எல்லாம் நம் சுந்தரிடம் கொடுத்துவிட்டு, பெட்டி படுக்கையோடு கிளம்பி விட்டார்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்.
பங்குகள்
நம் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் நிறுவனத்தின் 12 சதவிகித பங்குகளை லாரி பேஜ் (6 %) மற்றும் செர்கி பிரின் (6 %) ஆகியோர்கள் தான் வைத்து இருக்கிறார்கள். அதோடு இந்த இருவர் தான், சிறப்பு வோட்டிங் சக்திகளோடு மொத்த நிறுவனத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
சந்தோஷம்
2015-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தை தன் போக்கில் சிறப்பாக வழி நடத்தி வரும் சுந்தர் பிச்சைக்கு, மேற் கொண்டு கூகுள் தாய் நிறுவனத்தையும் நிர்வகிக்க முதன்மை செயல் அதிகாரியாக (CEO) பதவி உயர்வு கொடுத்து இருக்கும் செய்தி நமக்குத் தெரியும். இந்த செய்தியால் நியூ யார்க் சந்தையில் ஒரே அமர்க்களம் தான்.
விளைவு
சுந்தர் பிச்சை அல்ஃபபெட் நிறுவனத்தின் சி இ ஓ-வாக பதவி வகிக்க இருக்கும் செய்தி வெளிவந்ததில் இருந்தே.. அல்ஃபபெட் பங்குகளின் விலை நியூ யார்க் பங்குச் சந்தையில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. டிசம்பர் 03, 2019 அன்று அல்ஃபபெட் பங்கு விலை 1,295 டாலருக்கு நிறைவடைந்து இருந்தது. நேற்று டிசம்பர் 04, 2019 காலையில் இருந்தே அல்ஃபபெட் பங்குகளின் விலை ஏற்றம் கண்டு அதிகபட்சமாக 1,325 டாலர் தொட்டு வர்த்தகமானது.
நிறைவு
வர்த்தக நேர முடிவில் 1,320 டாலருக்கு நிறைவு அடைந்து இருக்கிறது. ஆக நேற்று ஒரே நாளில் டிசம்பர் 03, 2019 அன்றைய குளோசிங் விலைக்கும், டிசம்பர் 04, 2019 அதிகபட்சம் விலைக்கும் வித்தியாசம் சுமாராக 2.3 சதவிகிதம். இந்த 2.3 சதவிகித பங்கு விலை உயர்வால், அல்ஃபபெட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
நிறுவனர்களுக்கு
கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர்கள் வைத்திருக்கும் அல்ஃபபெட் நிறுவனத்தின், 12 % பங்குகளின் சந்தை மதிப்பு, சுமாராக 2.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 14,000 கோடி ரூபாய்) அதிகரித்து இருக்கிறது. ஆக சுந்தர் பிச்சை அல்ஃபபெட் நிறுவனத்தின் சி இ ஓ-வாக தேர்வு செய்யப்பட்ட செய்தியை சந்தை கொண்டாடித் தள்ளி இருக்கிறது.
நம் சென்னைவாசி சுந்தர் பிச்சையின் பெயருக்கு 14,000 கோடி ரூபாய், சந்தை மதிப்பு அதிகரித்து இருக்கிறது என்றால் நமக்கு எல்லாம் பெருமை தானே. வா தலைவா.. வா தலைவா..!
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications