15,000 ஊழியர்கள்.. ரூ.2800 கோடி டெபாசிட்.. கிரெடிட் சூசி இந்தியாவின் நிலை இது தான்!

கிரெடிட் சூசி - யுபிஎஸ் கையகப்படுத்துவதற்கான முழுமையாக அறிவிப்பு என்பது இதுவரையில் வெளியாகவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் கிரெடிட் சூசியின் இந்திய செயல்பாடுகள் என்னவாகும்? 15,000 ஊழியர்களின் நிலை என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

கிரெடிட் சூசியின் முக்கிய பங்குதாரர் ஆன சவுதி நேஷனல் வங்கி, இனி எந்த நிதியினையும் வங்கியில் முதலீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதன் பிறகே கிரெடிட் சூசியில் குழப்பம் என்பது நீடித்து வருகின்றது. தொடர்ந்து நிதி பிரச்சனைக்கு மத்தியில் என்ன செய்ய போகிறது? நிதியினை திரட்ட என்ன செய்ய போகிறது என பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஊழியர்களுக்கு உதவி

ஊழியர்களுக்கு உதவி

இந்தியாவில் வங்கித் துறையில் 15,000 ஊழியர்களை கொண்ட வங்கியாக உள்ளது. சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் செயல்பாடுகளை கொண்ட ஒரு வங்கியாகும்.

15,000 வலிமையான இந்தியப் பணியாளர்கள் வங்கியின் நேரடி செயல்பாடுகளுக்கு உதவி செய்யும் ஊழியர்களை கொண்டுள்ளது. எனினும் இது பல அறிக்கைகளின் படி 5000 - 7000 ஆக கூறப்படுகிறது. மற்ற ஊழியர்கள் சர்வதேச அளவிலான ஊழியர்கள் அடங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருப்பு என்ன?

இந்தியாவில் இருப்பு என்ன?

இவ்வங்கியின் கிளைகள் இந்தியாவில் மும்பை, புனே, குர்கான், பெங்களூர், ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 6 நகரங்களில் உள்ளது. இதன் உலகளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதி அதன் பெங்களூரு, ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா அலுவலகங்களில் இருந்து கையாளப்படுகிறது.

என்னென்ன சேவைகள்?

என்னென்ன சேவைகள்?

சுவிஸ் வங்கி கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், அதன் ஐடி ஊழியர்களில் 25% பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர். எனினும் அதன் பெரும்பகுதி இந்தியாவுக்கு வெளியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரெடிட் சூசி இந்திய ஒழுங்கு முறை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி உரிமம் மற்றும் சொத்து மேலாண்மை, முதலீட்டு வங்கி மற்றும் தரகு சேவையையும் கொண்டுள்ளது.

நிகரலாபம்

நிகரலாபம்

மார்ச் 2022 நிலவரப்படி கிரெடிட் சூசி வங்கி வசம் 2800 கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. அதன் கடன்கள் மற்றும் அட்வான்சஸ் 947 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் 804 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 303 கோடி ரூபாயாகவும் உள்ளது. சுவிட்சர்லாந்துக்கு வெளியே கிரெடிட் சூசி இரண்டாவது பெரிய சந்தை இந்தியாவாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+