முத்து முத்தா 15 திட்டங்கள்.. மன்மோகன் சிங்-ஐ எல்லோரும் கொண்டாட இதுதான் காரணம்..!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் கொண்டு வந்த 15 முக்கியமான திட்டங்கள் இன்றும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

Direct Benefit Transfer: 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு மக்கள் நலத்திட்டங்கள் அதற்கு பொருத்தமான பயனாளிகளுக்கு நேரடியாக சென்று செல்லும் வகையில் டைரக்ட் பெனிபிட் டிரான்ஸ்பர் என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் ஓய்வூதியம், மானியம், ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.

முத்து முத்தா 15 திட்டங்கள்.. மன்மோகன் சிங்-ஐ எல்லோரும் கொண்டாட இதுதான் காரணம்..!

ஆதார் அடையாள அட்டை: தற்போது இந்தியாவில் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வித்திட்டது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தான். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் ஆதார் பதிவை தொடங்கி வைத்தது. அத்தோடு ஆதார் எண்ணையும் மக்கள் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் வங்கி கணக்கையும் இணைத்து திட்டங்கள் சரியான நபர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்தது.

வறுமை ஒழிப்பு : 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் வறுமையில் வாடி வந்த மக்களின் சதவீதம் 37.2% ஆக இருந்து மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் அது 21 . 9 சதவீதம் என குறைந்தது. 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமையில் வாடிய மக்களின் எண்ணிக்கை 40 .71 கோடி, 2012 ஆம் ஆண்டில் அது 26 . 93 கோடி என குறைந்தது.

சந்திரயான் மற்றும் மங்கள்யான்: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு கணிசமான நிதியை ஒதுக்கி பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அந்த வகையில் இந்தியாவின் முதல் நிலவு ஆய்வுத் திட்டமான சந்திரயான் 1 மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனையும் மன்மோகன் சிங் தான் தொடங்கி வைத்தார்.

போலியோ இல்லாத இந்தியா: இந்தியாவில் போலியோ மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த போலியோவை ஒழித்தது இவரது ஆட்சி தான். 2012 ஆம் ஆண்டில் முழுவதுமாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்தது. இதற்கு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு எடுத்த பணிகள் காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்: தற்போது நாம் அரசு சம்பந்தப்பட்ட தகவல்களை எளிதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஒரு விண்ணப்பம் செய்தாலே கிடைத்துவிடும். இதற்கு வித்திட்டது மன்மோகன் சிங்கரசு தான். 2005 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

சிறப்பு பொருளாதாரம் மண்டலங்கள்: இந்தியாவில் தொழில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2005 ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்தது. இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலையை நிறுவுவதற்கு சாதகமான கொள்கைகளும் கொண்டுவரப்பட்டன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தற்போது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வரக்கூடிய இந்த திட்டம் 2006 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இதன்படி கிராமப்புறங்களில் இருக்கும் பெரிய அளவில் திறன் இல்லாத படிப்பறிவு இல்லாத நபர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களாவது குறைந்தபட்ச ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தியா அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் கையெழுத்தான மிக முக்கிய ஒப்பந்தம் இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் ஆகும். அப்பொழுது அமெரிக்க அரசுடன் மிகத் தீவிரமான பேச்சு வார்த்தை நடத்தி இதனை சாதித்து காட்டினார் மன்மோகன் சிங் . அவரை சிங் இஸ் கிங் என அனைவரும் பாராட்டினர்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிப்பு: மனித கழிவுகளை அள்ளும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தான்.

அன்னிய நேரடி முதலீடு: தற்போது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் நேரடியாக முதலீடு செய்து தொழில் செய்து வருகின்றன. இதற்கு வித்திட்டது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தான். 2012 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு இந்தியாவில் மேல் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.

லோக்பால் சட்டம்: ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய ஒரு சட்டமாக லோக்பால் சட்டம் பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இந்த மசோதாவை நிறைவேற்றி ஊழலில் ஈடுபடக்கூடிய அரசு அதிகாரிகளுக்கு செக் வைத்தது.

ஜிடிபி மற்றும் பொருளாதாரம்: இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் சராசரி ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதத்திற்கும் மேல்தான் இருந்தது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 10% என்ற வரலாற்று வரலாற்றில் இல்லாத வளர்ச்சியை எட்டியது.

1 ட்ரில்லியன் பொருளாதாரம்: 2007 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின் கீழ் 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற மைல்கல்லை எட்டியது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்: 2013இல் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து நாட்டின் வறுமையில் வாழும் மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு வழிவகை செய்தது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+