மும்பை: இந்தியாவில் கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களுடைய பதிவுச் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்து விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதிச் சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கான உரிமங்களை வழங்குவது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அது குறித்து எச்சரித்து அதனை சரி செய்வது என்பன உள்ளிட்ட செயல்களை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

கிட்டத்தட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
”டாட்டா கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் உள்ளிட்ட 15 வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில் 9 வங்கி சாராத நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்துள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆறு நிறுவனங்கள் வங்கிசாரா நிதி வணிகத்தில் இருந்து வெளியேறி தங்களது பதிவு சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளன என கூறியுள்ளது. வியான் குரோத் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் (Vian Growth Capital Pvt Ltd), டிராப் லீசிங் அண்ட் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (Drap Leasing and Finance Pvt Ltd), ஜூவல் ஸ்டிரிப்ஸ் பிரைவேட் லிமிடெட் (Jewel Strips Pvt Ltd), ரிவால்விங் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் (Revolving Investments Ltd), அன்சு லீசிங் பிரைவேட் லிமிடெட் (Anshu Leasing Pvt Ltd), மற்றும் ஏவிபி ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (A. V. B. Finance Pvt Ltd) ஆகிய 6 நிறுவனங்களும் நிதி வணிகத்தில் இருந்தே வெளியேறிவிட்டன.
அதே வேளையில் ஜேடிஎஸ் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (JDS Securities Pvt Ltd), ஜோதானி மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (Jodhani Management Pvt Ltd), ஏபிஆர்என் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ABRN Finance Pvt. Ltd), டாடா கேபிட்டல் ஃபைனான்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Tata Capital Financial Services Ltd), டாடா க்ளீண்டெக் கேபிடல் லிமிடெட் (Tata Cleantech Capital Ltd), நேபெரால் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் (Naperol Investments Ltd), யுஎஸ்ஜி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (USG Financial Services Pvt Ltd), உர்ஜா கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் ( Urja Capital Pvt Ltd), மற்றும் வந்தனா டீலர்ஸ் ( Vandana Dealers Pvt. Ltd) ஆகிய நிறுவனங்களும் உரிமங்களை ஒப்படைத்து விட்டன. இந்த ஒன்பது நிறுவனங்களும் ஒருங்கிணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் தங்களுடைய உரிமங்களை ஒப்படைத்துவிட்டன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications