இந்திய பார்மா நிறுவனங்களுக்கு உலகம் முழுவதும் டிமாண்ட் இருக்கும் நிலையில், அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது உற்பத்தியை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்திய பார்மா நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாட்டில் தடை செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் எது..?
இந்தியாவில் இந்த நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கை எடுக்கப்படுமா..?
யோகா குரு பாபா ராம்தேவ்
இந்தியாவின் பிரபலமான யோகா குரு பாபா ராம்தேவ் -க்கு சொந்தமான பதஞ்சலி மருந்துப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் திவ்யா பார்மசி உட்பட 16 இந்திய மருந்து நிறுவனங்கள் நேபாள நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது.
16 நிறுவனங்கள்
இதைத் தொடர்ந்து இந்தியாவின் ரேடியன்ட் பேரன்டெரல்ஸ் லிமிடெட், மெர்குரி லேபரேட்டரீஸ் லிமிடெட், அலையன்ஸ் பயோடெக், கேப்டாப் பயோடெக், அக்லோமெட் லிமிடெட், ஜீ லேபரட்டரீஸ், டாஃபோடில்ஸ் பார்மாசூட்டிகல்ஸ், ஜிஎல்எஸ் பார்மா, யுனிஜூல்ஸ் லைஃப் சயின்ஸ், கான்செப்டிகல் லேபர் சயின்ஸ், கான்செப்டிகல் லேபர் சயின்ஸ், அன்செப்டிகல் லேபர் சயின்ஸ் , காடிலா ஹெல்த்கேர் லிமிடெட், டயல் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மக்கூர் லேபரட்டரீஸ் ஆகியவை நேபாள நாட்டின் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தடை பட்டியல்
நேபாள அரசின் உத்தரவுகள் படி தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள 16 இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை நேபாளத்தில் இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியாது.
உலகச் சுகாதார அமைப்பு
நேபாள அரசு எச்சரிக்கைகளைத் தாண்டி நேரடியாகத் தடை செய்ய முக்கியக் காரணமும் உண்டு. இந்த 16 இந்திய பார்மா நிறுவனங்கள் உலகச் சுகாதார அமைப்பின் (WHO) மருந்து உற்பத்தித் தரங்களுக்குக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாக மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் மருந்து நிர்வாகத் துறை டிசம்பர் 18-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மருந்து சப்ளை
நேபாள அரசு 16 இந்திய பார்மா நிறுவனங்கள் மீதான தடை உத்தரவின் அறிவிப்பு தொடர்ந்து, இந்த நிறுவனங்களின் மருந்துகளைச் சப்ளை செய்து வரும் நேபாளத்தில் உள்ள உள்ளூர் ஏஜென்ட்கள் சந்தையில் இருக்கும் மருந்துகளை உடனடியாகத் திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். இதன் சந்தை புழக்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி தள ஆய்வு
16 இந்திய பார்மா நிறுவனங்களின் உற்பத்தி தளத்தை ஆய்வு செய்த பிறகே தடை உத்தரவை நேபாள அரசு விதித்துள்ளதாக அந்நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வசதிகளை ஆய்வு செய்ய நேபாளம் மருந்து ஆய்வாளர்களை இந்தியாவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
ஹேண்ட் சானிடைசர்
சமீபத்தில் இதேபோன்று மற்றொரு உத்தரவில், இந்தியாவின் குளோபல் ஹெல்த்கேர் தயாரித்த 500 மில்லி மற்றும் 5 லிட்டர் ஹேண்ட் சானிடைசர்களைத் திரும்பப்பெறுமாறு நேபாள மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அந்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இதோடு இந்த ஹேண்ட் சானிடைசர்களைப் பயன்படுத்தவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications