பொதுவாக சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில், மற்றவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போதும், அதன் மீது ஆர்வம் ஏற்படும். அதனை எப்படியேனும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
அந்த காலக்கட்டத்தில் ஏதேனும் வேலை செய்து சிறுக சிறுக சேமித்து ஸ்மார்ட்போன் வாங்கும் சிறுவர் சிறுமியர்கள் ஏராளம்.
ஆனால் அந்த ஆர்வமே பிரச்சனையாக மாற்றி விட்டது மேற்கு வங்கத்தினை சேர்ந்த ஒரு சிறுமிக்கு.
சிறுவர்களும் பயன்படுத்தும் சூழல்
ஸ்மார்ட்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருந்தாலும், பள்ளி சிறுவர் சிறுமிகளும் பயன்படுத்தும் சூழலும் இருந்து வருகின்றது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு அனைத்து தரப்பினரிடமும் இருந்து வருகின்றது. இது சில சமயங்களில் இது அத்தியாவசியமானதாக இருந்தாலும், இதனால் வரும் பின் விளைவுகளும் மோசம்.
பணத்திற்காக ரத்தம் விற்பனை
அப்படி தான் மேற்கு வங்கத்தில் இந்த நிகழ்வும் நடந்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்க பணத்திற்காக அந்த மேற்கு வங்க சிறுமி, தனது ரத்தத்தினையே விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்மார்ட்போன் பயன்படுத்திய சிறுவர், சிறுமியர்கள் மத்தியில், தற்போது ஸ்மார்ட்போன் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அதன் மீதான ஆர்வம் அதிகரித்து விட்டது.
மருத்துவ செலவுக்கு பணம்
தபானை சேர்ந்த சிறுமி, வீட்டில் டியூசன் செல்வதாக கூறிவிட்டு, நேராக பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த வங்கிக்கு சென்ற சிறுமி, அங்கிருந்தவர்களிடம் தனது தம்பிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். மருத்துவ செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காக பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எதற்கான பணம்?
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சைல்டுலனுக்கு கால்செய்து விவரத்தினை கூறியுள்ளார்.
மேலும் சிறுமியிடம் மேற்கோண்டு விசாரணை நடத்தியபோது தான் அவர் தனக்கு ஸ்மார்ட்போன் வேண்டும் என்றும், அதற்கான பணத்திற்காக ரத்தத்தினை விற்பனைச் செய்ய முன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் ஸ்மார்ட்போன் ஆர்டர்
மேலும் தனது உறவினர்களின் செல்போனிலிருந்து ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி மைனர் என்பதால் மாவட்ட நலக் குழந்தைகள் குழு உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications