இந்தியாவை விட்டுவிட்டு அமெரிக்கா போன பணம்.. இந்திய நிறுவனங்கள் செய்ததை பார்த்தீங்களா..?

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக உயர்ந்துள்ள அமெரிக்காவில், இந்திய நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பவர் ஹவுஸ் ஆக உருவெடுத்துள்ளன. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் தனியார் முதலீட்டு அளவுகள் பெரிய அளவிலான பாதித்து இருக்கும் வேளையில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வல்லரசு நாடாக அமெரிக்காவில் சுமார் 163 இந்திய நிறுவனங்கள் 40 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4,25,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) வெளியிட்டுள்ள ஒரு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை விட்டுவிட்டு அமெரிக்கா போன பணம்.. இந்திய நிறுவனங்கள் செய்ததை பார்த்தீங்களா..?

இந்திய தொழில் கூட்டமைப்பு "இந்திய வேர்கள், அமெரிக்க மண்" என்ற தலைப்பில் வெளியிட்ட கணக்கெடுப்பின் 7வது அறிக்கையில், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் corporate social responsibility-க்காக கிட்டத்தட்ட 185 மில்லியன் டாலர் அளவிலான தொகையை இதுவரையில் செலவிட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் கார்செட்டி முன்னிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து இந்த அறிக்கையை வெளியிட்டப்பட்டது. இந்த அறிக்கையை வெளியிடும் போது, ​​அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வலிமை, பாதுகாப்பு மற்றும் போட்டித்திறனை கொண்டு வந்துள்ளன என இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து கூறினார்.

CII அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மூலம் அதிகம் பலன் அடைந்த டாப் ஐந்து மாநிலங்களில் டெக்சாஸ் முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 163 இந்திய நிறுவனங்கள் செய்த 40 பில்லியன் டாலர்களுக்கு அதிகமான முதலீட்டில் டெக்சாஸ் மாநிலத்தில் 20,906 வேலைவாய்ப்புகளையும், நியூயார்க்-ல் 19,162 வேலைவாய்ப்புகளையும், நியூ ஜெர்சி-யில் 17,713 வேலைவாய்ப்புகளையும், வாஷிங்டன்-ல் 14,525 வேலைவாய்ப்புகளையும், புளோரிடா-வில் 14,418 வேலைவாய்ப்புகளையும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீட்டில் அதிக முதலீடுகள் பெற்றதிலும் டெக்சாஸ் 9.8 பில்லியன் டாலரும், ஜார்ஜியா 7.5 பில்லியன் டாலரும், நியூ ஜெர்சி 4.2 பில்லியன் டாலரும், நியூயார்க் 2.1 பில்லியன் டாலரும், மாசசூசெட்ஸ் 1.4 பில்லியன் டாலரும் பெற்றுள்ளது.

இதேவேளையில் இந்திய நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்த இந்த பகுதிகள் தான் அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா முழுவதும் இந்தியர்கள் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் எண்ணிக்கை சற்று அதிகம் என்றால் மறுப்பதற்கு இல்லை.

இந்தியாவை விட்டுவிட்டு அமெரிக்கா போன பணம்.. இந்திய நிறுவனங்கள் செய்ததை பார்த்தீங்களா..?

இந்த பட்டியலில் இருக்கும் 163 நிறுவனங்களில் சுமார் 85 சதவீத நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிக முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 83 சதவீத நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகம் 2021-22ல் 119.5 பில்லியன் டாலராகவும், 2020-21ல் 80.51 பில்லியன் டாலராகவும், 2022-23ல் 7.65 சதவீதம் அதிகரித்து 128.55 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2022-23ல், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2.81 சதவீதம் அதிகரித்து 78.31 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதி சுமார் 16 சதவீதம் அதிகரித்து 50.24 பில்லியன் டாலராக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+