இந்திய வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்தவும், வங்கிகள் திவாலாவதைத் தடுக்கவும் மத்திய அரசம், ரிசர்வ் வங்கியும் இணைந்து கடந்த சில வருடங்களாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் லாப அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதேவேளையில் ஆர்பிஐ பல வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது, ரத்துச் செய்யப்பட்ட பெரும்பாலான வங்கிகள் கூட்டுறவு வங்கிகளாகும், மேலும் பெரும்பாலான நேரத்தில் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் மக்களின் பணத்தைப் பாதுகாக்கும் திட்டத்துடன் ஆர்பிஐ இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான 9.7 வருட ஆட்சியில் எப்போதும் இல்லாத வகையில் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியாகச் சுமார் 17 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ஆர்பிஐ. இந்திய வங்கித் துறையைப் பயமுறுத்தி வந்த நிதியியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆர்பிஐ எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்த 17 வங்கிகளின் வங்கி உரிம ரத்து நடவடிக்கை.
இந்த 17 வங்கிகளில் சுமார் 6 வங்கிகள் நகரக் கூட்டுறவு வங்கிகளாகும், கிராம கூட்டுறவு வங்கிகளை ஒப்பிடுகையில் நகரக் கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலை சற்று உயர்ந்ததாகவே உள்ளது, ஆனாலும் வங்கிகளில் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமலும், புதிதாக வருமானம் ஈட்டும் வழிகள் இல்லாத காரணத்தாலும், மக்களின் முதலீட்டைக் காக்கும் ஓரே இலக்குடன் ஆர்பிஐ 2023 ஆம் ஆண்டில் 17 கூட்டுறவு வங்கிகளின் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டில் ஆர்பிஐ சுமார் 60 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதில் முக்கியமானதாகப் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உடன் இணைக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு 17 வங்கி உரிமம் ரத்து செய்ய ஆர்பிஐ 2022ல் 12 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 39 நகரக் கூட்டுறவு வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது, இந்தியாவில் தற்போது 1502 நகரக் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வரும் வேளையில் சுமார் 8.8 சதவீத வாராக் கடன் உடன் இயங்கி வருகிறது, இதன் மொத்த நிதி ஆதாரம் 3.30 லட்சம் கோடி ரூபாயாகும்.
இறுதியாக ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தாலும் பெரும்பாலான டெபாசிட்தாரர்களின் வைப்பு நிதியை DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு மூலம் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளது, மிகவும் கணிசமான மக்கள் மட்டுமே மிகவும் குறைந்த அளவிலான நிதியை இழந்துள்ளனர். இதனால் மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை.


Click it and Unblock the Notifications