பரபரப்பான பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக கடந்த நிதியாண்டு முடிந்து, நடப்பு நிதியாண்டு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் தனி நபர் மற்றும் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இவற்றில் பல மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளாகும். அந்த வகையில் கவனிக்க வேண்டிய 17 விஷயங்கள் என்ன? இதில் முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? தனி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பட்ஜெட், புதிய வரி முறை, வரி, வரி சலுகை, வரி விலக்கு, வருமான வரி
புதிய வரி முறை
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு புதிய வருமான வரி முறையானது அமலுக்கு வந்துள்ளது. புதிய வருமான வரி முறையே இனி இயல்பான வரி முறையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பழைய வரி முறையை தேர்வு செய்ய விருப்பம் இருந்தால் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆக யாருக்கு எது ஏற்றது என்பதை சரியாக தீர்மானம் செய்ய வேண்டிய அவசியமான காலகட்டமாகும்.
புதிய வரி முறையை பொருத்த வரையில் 3 லட்சம் ரூபாய் வரையில் வரி இல்லை. அதோடு 87 ஏ-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.
வருமான வரியில் மாற்றம்
- ரூ.3 லட்சம் வரையில் - வரி ஏதும் இல்லை
- ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையில் - 5%
- ரூ.6 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய் வரையில் - 10%
- ரூ.9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் - 15%
- ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையில் - 20%
- ரூ.15 லட்சம் ரூபாய்க்கு மேல் - 30%
நிலையான வரி கழிவு
புதிய வரி முறையை தேர்வு செய்யும் ஒருவர் 80 சி மற்றும் 80டி உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு கீழ் வரிச் சலுகை பெற முடியாது. ஆக அதனையும் நினைவில் கொள்வது அவசியமான ஒன்று. எனினும் சம்பளம் பெறும் வரி செலுத்துபவர் 50,000 ரூபாய் வரையில் நிலையான விலக்கு பெற அனுமதிக்கப்படுகிறார். புதிய வரிச் சட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிலையான விலக்கு பெற தகுதியுடையவர்கள்.
ஒரு சம்பளதாரர் 15.5 லட்சம் ரூபாய் சம்பளம் அல்லது அதற்கு மேலாக வருமானம் பெறும் பட்சத்தில் 52,500 ரூபாய் வருமானம் பெறும்போது 52,500 ரூபாய் நிரந்தர வரி கழிவாக பெறலாம்.
HNIs கூடுதல் கட்டணம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் உயர் வருமானம் கொண்ட HNI தனி நபர்கள், புதிய வருமான வரி விதிப்பை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 37%ல் இருந்து 25% குறைந்துள்ளது.
புதிய வருமான வரி விதிப்பில், 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கான கூடுதல் கட்டண விகிதம் 37%-ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகபட்ச வரி விகிதம் 42.74%ல் இருந்து 39% ஆக குறைகிறது.
டிடிஎஸ் ஆன்லைன் கேமிங்
ஆன்லைன் கேம்களுக்கான டிடிஎஸ் பிடித்தம் என்பது ஏப்ரல் 1,2023ல் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நிதியாண்டில் ஆன்லைன் கேமிங் மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் 30% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
கடன் பண்ட் LTCG வரி
ஏப்ரல் 1 முதல், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் குறுகிய கால மூலதன ஆதாயங்களாக வரி விதிக்கப்படும். இத்தகைய முதலீடுகளை செய்த முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால வரிச் சலுகைகளை (LTCG) இந்த நடவடிக்கை அகற்றும்.
பிஎஃப் - டிடிஎஸ்
பான் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு இபிஎஃப்-ல் லிருந்து பணத்தை திரும்ப எடுக்க டிடிஎஸ் விகிதம் 30%ல் இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது வருங்கால வைப்பு நிதியில் பான் நம்பரை செய்யாத நபர்களுக்கு உதவலாம்.
விடுப்பு பயண கொடுப்பனவு
அரசு அல்லாத ஊழியர்களுக்கான விடுப்பு பணப்பரிமாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பு 2002ஆம் ஆண்டு முதல் 3 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்க ரசீது
2023 பட்ஜெட்டில் தங்கத்தை, மின்னணு தங்க ரசீதுக்கு (EGR) மாற்றினால், மூலதன ஆதாய வரி ஏதும் விதிக்கப்படாது என்று சீதாராமன் கூறினார். இது ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
இன்சூரன்ஸ் பிரீமியம்
2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான (யுலிப் தவிர) மொத்த பிரீமியம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், 5 லட்சம் ரூபாய் வரையிலான மொத்த பிரீமியம் கொண்ட பாலிசிகளின் வருமானத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது யூலிப் (யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்) திட்டத்திற்கு பொருந்தாது
சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்கள்
ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்களில் (MLD) முதலீடு குறுகிய கால மூலதனச் சொத்துகளாக இருக்கும். இத்துடன், முந்தைய முதலீடுகளின் வரவு முடிவடையும் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தாக்கம் சற்று எதிர்மறையாக இருக்கும்.
பிரிவு 54 மற்றும் பிரிவு 54F
2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் திட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிவு 54 மற்றும் 54F இன் கீழ் குடியிருப்பு வீடுகளில் முதலீட்டின் மீதான மூலதன ஆதாயத்திற்கு 10 கோடி ரூபாய் வரையில் மடுகே வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54, ஒரு குடியிருப்பு வீடு அல்லது சொத்தை விற்பவருக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் 54-வது பிரிவின்படி, ஒரு சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மற்றொரு குடியிருப்புச் சொத்தை வாங்கப் பயன்படுத்தினால், விற்பனையாளர் மூலதன ஆதாய வரியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
பிரிவு 54 எஃப் கீழ் ஒரு குடியிருப்பு வீட்டைத் தவிர வேறு எந்த சொத்தின் விற்பனையிலும், நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு கிடைக்கிறது. வாங்கிய அல்லது கட்டப்பட்ட ஒரு வீட்டைத் தவிர, அத்தகைய சொத்து விற்பனை செய்யப்பட்ட தேதியைப் போல, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை நீங்கள் வைத்திருக்கக்கூடாது.
பிரிவு 24 கீழ் வரி சலுகை
பிரிவு 24-யின் கீழ், நீங்கள் வசிக்கும் வீட்டின் மீதான வீட்டுக் கடன் வட்டி பணம் செலுத்தல்கள் மீது 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு கோரலாம். நீங்கள் கடன் பெற்ற நிதியாண்டின் இறுதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் வீடு கட்டப்படவில்லை என்றால், ரூ. 30,000 மட்டுமே கழித்தல் என்று கோர முடியும்.
என்பிசிஐ கட்டணம்
என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி ப்ரீபெய்டு வாலட்களைப் பயன்படுத்தி செலுத்தப்படும், 2,000-ரூபாய்க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1% கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்த மாற்றம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்டத்தில் என்ன மாற்றம்?
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஆனது இந்த 2023 பட்ஜெட்டில் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரித்துள்ளது.
மார்ச் 31, 2023ல் முடிவடைந்த காலாண்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான (SCSS) வட்டி விகிதத்தை அரசாங்கம் 8% ஆக உயர்த்தியுள்ளது.
இதேபோல் மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ஒரு கணக்கிற்கு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை போல் கூட்டுக் கணக்கிற்கு அதாவது ஜாயின்ட் கணக்கிற்கு 9 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மகிளா சம்மான் பச்சத் சேமிப்பு திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5% வரை வட்டி வழங்கப்படும் என்றும், 2025ம் ஆண்டு மார்ச் வரை காலத்திற்கு வழங்கப்படும். இந்தத் திட்டமானது இரண்டு வருட கால அவகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டமும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
என்பிஎஸ் அப்டேட்
என்பிஎஸ் திட்டத்தில் ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்காதவர்கள், KYC அப்டேட் செய்யாமல் உள்ளவர்களின் என்பிஎஸ் கணக்கானது நிபந்தனைகளின் கீழ் மூடப்படலாம் என கூறப்படுகின்றது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications