அடுத்த 5 ஆண்டுகளில் வேகமாக வளரக்கூடிய வேலை வாய்ப்புகள் என்னென்ன? என்பது குறித்தும், எந்தெந்த வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்ற விவரங்களையும் சமீபத்தில் வெளியான அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி விவசாய தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு வேகமாக வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேசியர், டிக்கெட் கிளர்க் போன்ற வேலைவாய்ப்புகள் இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் வெளியிட்ட "பியூச்சர் ஆஃப் ஜாப்ஸ் ரிப்போர்ட் 2025", 2030-ஆம் ஆண்டுக்குள் 170 மில்லியன் புது வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள் தொகை மாற்றங்கள், புவிசார் பொருளாதாரப் பதற்றங்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக இனிவரும் நாட்களில் தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,000-த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் டேட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், பிக் டேட்டா, சைபர் செக்யூரிட்டி போன்ற திறன்களுக்கான தேவை வேகமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படைப்பாற்றல், சிந்தனை, சுறுசுறுப்பு போன்ற மனித திறன்கள் முக்கியம் என்பதையும் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹெல்த் கேர் மற்றும் எஜுகேஷன் துறைகளில் 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகரித்த வேலைவாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், புதுப்பிக்கத் எரிசக்தி துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களும் வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
விவசாயத் தொழிலாளர்கள், டெலிவரி ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிகள் 2030-ஆம் ஆண்டுக்குள் அதிகபட்ச வேலை வளர்ச்சியைக் காணும். மருத்துவப் பணியாளர்கள் போன்ற பணிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் போன்ற கல்விப் பணிகளுக்கும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தும் போக்கு தொடர்கிறது. எனவே முதலாளிகளில் பாதிபேர் தங்கள் பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளனர். 77 சதவீதம் பேர் தங்கள் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல வேகமாக வளர்ந்து வரும் வேலைகளின் அடிப்படையில் விவசாய தொழிலாளர்கள் முதலிடத்தில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கேசியர் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் போன்ற பணிகள் மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. ஆனால் ஜெனரேட்டிவ் AI தொழிலாளர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதால் கிராபிக் டிசைனர்கள் உள்ளிட்ட பணிகளும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications