பெங்களூரு: அதிக பணிச்சுமை காரணமாக அண்மையில் 26 வயது இளம்பெண் ஒருவர் இறந்தார். இதனை அடுத்து வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும் , உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் தன்னுடைய இணை நிறுவனர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்வதாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. துஷார் என்பவர் வாணி ரிசர்ச் லேப் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவர் லிங்குடினில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவருடைய துணை நிறுவன அபினாஷ் கரே பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் நிறுவனத்தில் எப்படி இரவு பகல் பாராமல் உழைக்கிறார் என்பது குறித்து பதிவு செய்திருந்தார்.
அவர் வேலை செய்யும் கணினி அவரது படுக்கைக்கு மூன்றடி இடைவெளியிலேயே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். காலை 8 மணிக்கு எழுந்த உடனேயே அபினாஷ் நேரடியாக கணினியை ஆன் செய்து வேலைக்கு உட்கார்ந்து விடுவார் .இவ்வாறு காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை இரவு 2 மணி வரை நீடிக்குமாம்.
தொடர்ச்சியாக தன்னுடைய நிறுவனத்திற்காக ஏழு மாதங்களாக அவர் இவ்வாறு கோடிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என துஷார் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படி ஒரு மோசமான பணி கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவது சரியா என கேள்வி எழுந்துள்ளது. இப்படி இரவு பகல் பாராமல் உழைப்பது நிறுவனத்திற்கு சாதகம் தான் ஆனால் அவருக்கு என பலர் வினவியுள்ளனர். இது அவரது உடல் நிலைக்கும் மனநிலைக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் சாடியுள்ளனர். பல்வேறு விமர்சனங்கள் இழந்ததை அடுத்து துஷார் அந்த லிங்குடின் பதிவினை நீக்கிவிட்டார். மேலும் ஒரு மோசமான பணி கலாச்சாரத்தை விளம்பரப்படுத்த படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல என தெரிவித்துள்ளார்.
ஒரு ஸ்டார்ட் அப்பை தொடங்கினால் அதனை பெரிய அளவில் கொண்டு வருவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்பதை தான் தன்னுடைய பதிவின் மூலம் தெரிவிக்க விரும்பியதாக அவர் கூறியுள்ளார். அதே நேரம் உடல் ஆரோக்கியம் குறித்து பலரும் கவலை தெரிவித்து இருந்தீர்கள் நிச்சயமாக தன்னுடைய நிறுவனம் அதிலும் கவனம் செலுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications