திங்கட்கிழமை துவங்கி இந்த வார முடிவிற்குள் சுமார் 18 நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்டு சுமார் 4000 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடாக திரட்ட உள்ளது. நீண்ட காலத்திற்கு பின்பு இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ சீசன் துவங்கியுள்ளது, அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வரும் வேளையில், இந்த 18 ஐபிஓ முக்கிய உந்து சக்தியாக இருக்கும்.
ஏற்கனவே 5 ஐபிஓக்கள் முதலீட்டுக்கு திறந்த நிலையில் இருக்கும் வேளையில் திங்கட்கிழமை முதல் சுமார் 18 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த 18 நிறுவன ஐபிஓ-வில் 4 முக்கிய ஐபிஓ-க்கள் உள்ளது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இந்த 4 நிறுவன்களும் தான் முக்கிய டார்கெட் ஆக உள்ளது.

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான JSW குரூப் 2010-க்கு பின்பு முதல் முறையாக துறைமுகம் சார்ந்த JSW Infrastructure நிறுவனத்தின் ஐபிஓ நேற்று துவங்கியது. சுமார் 113- 119 ரூபாய் விலையில் 2800 கோடி ரூபாயை முதலீடாக திரட்ட உள்ளது.
பெசிலிட்டி மேனேஜ்மென்ட் சேவை நிறுவனமான Updater Services நிறுவனம் 640 கோடி ரூபாய் முதலீட்டை, 280 - 300 கோடி ரூபாய் பங்கு விலையில் முதலீட்டை திரட்ட உள்ளது. செப்டம்பர் 27 ஆம் தேதி பார்மா நிறுவனமான Valiant Laboratories 133-140 ரூபாய் விலையில் சுமார் 152.60 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐபிஓ வெளியிட உள்ளது.
டெல்லியை சேர்ந்த plaza Wires செப்டம்பர் 29 ஆம் தேதி 51-54 ரூபாய் விலையில் 71.28 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டும் இலக்கில் ஐபிஓ வெளியிட உள்ளது. Vaibhav Jewellers -ன் தாய் நிறுவனமான மனோஜ் வைபவா ஜெம்ஸ் இன்று 270 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட 204-215 ரூபாய் விலையில் ஐபிஓ வெளியிட உள்ளது.
SME பிரிவில் rabian Petroleum, Newjaisa Technologies, Inspire Films, Saakshi Medtech and Panels, Digikore Studios என 12 ஐபிஓ-க்கள் சுமார் 431 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. இந்த நிறுவனங்களின் ஐபிஓ திங்கட்கிழமை துவங்கிய நிலையில் புதன்கிழமை முடிய உள்ளது.
இதோடு சுனிதா டூல்ஸ் 22.04 கோடி ரூபாய்க்கும், சிட்டி கார்ப் அக்ரோ 15 கோடி ரூபாய்க்கும், Kontor Space நிறுவனம் 15.62 கோடி ரூபாய்க்கும் ஐபிஓ வெளியிட உள்ளது. மேலும் கோயல் சால்ட் E Factor Experiences, Vinyas Innovative Technologies, Canarys Automations, Vishnusurya Projects and Infra, Karnika Industries ஆகியவையும் சிறிய தொகைக்கு ஐபிஓ வெளியிட உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications