பிரிட்டன்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பிரிட்டன் மன்னர் சார்லஸிடம் இருந்து விருது வாங்கியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயது பெண் ஆர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவர் அண்மையில் பிரிட்டனுக்கு சென்று மன்னர் சார்லஸை சந்தித்து விருது பெற்று நாடு திரும்பியுள்ளார்.

பிரின்ஸ் அறக்கட்டளை விருது விழாவில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு சென்ற ஆர்த்தி அங்கு உயரிய விருதான அமல் குளூனி பெண்கள் மேம்பாட்டு விருதினை வாங்கியுள்ளார். தன்னுடைய பிங்க் ஈ-ஆட்டோ திட்டத்தின் மூலம் பல்வேறு பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக ஆர்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இவர் தொடங்கிய பிங்க் ஆட்டோ திட்டம் தற்போது நாடு முழுவதும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக ஆர்த்திக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் விருதினை பெற்றுக் கொண்ட பிறகு பேட்டி அளித்துள்ள ஆர்த்தி, தன்னை போலவே பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக தான் மாறி இருப்பதை கண்டு பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தான் லண்டனுக்கு பயணம் செய்வதாக குறிப்பிட்ட அவர் இங்கிருந்து தன்னுடைய ஐந்து வயது மகளுக்கு கேக் மற்றும் ஷூ உள்ளிட்டவைகளை பரிசாக வாங்கிச் செல்லப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
கடந்த மே 22ஆம் தேதி மன்னர் சார்லஸை சந்தித்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ள ஆர்த்தி, மன்னரை சந்தித்த அந்த தருணத்தை தன்னால் வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
சார்லஸ், அனைவரிடமும் அன்புடன் பேசி பழகியதாக கூறும் அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய குடும்பத்தினருக்கும் மன்னர் தன்னுடைய வழக்கத்தையும், பாராட்டுகளையும் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
தன்னுடைய பிங்க் ஆட்டோ திட்டம் குறித்து எடுத்துரைத்த போது பொறுமையுடன் அதனை கேட்டு கொண்ட மன்னர் தன்னுடைய செயல்பாடுகளை பாராட்டினார் என கூறியுள்ளார்.
பிரின்ஸ் டிரஸ்ட் இன்டர்நேஷனல் என்பது மன்னர் சார்லஸ் வேல்ஸ் இளவரசாக இருந்த போது தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளையானது தற்போது கிங்ஸ் டிரஸ்ட் இன்டர்நேஷனல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 நாடுகளில் இருந்து தங்கள் பகுதியில் மாற்றங்களை உருவாக்கிய இளைஞர்கள் 20 பேரை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டில் அமல் குளூனி விருது ஆர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆர்த்தி பிங்க் ஈ-ரிக்ஷா என்ற திட்டத்தை முன் வைத்தார். இந்த திட்டத்தின் படி பெண்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோக்களை மானிய விலையில் கொடுத்து, அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் மற்ற பெண்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்தையும் உறுதி செய்வதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு.
குறிப்பாக கைம்பெண்கள் மற்றும் தனி ஆளாக நின்று குடும்பத்தை தாங்க கூடிய பெண்கள் போன்றவர்களை தேர்வு செய்து மானிய விலையில் மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு பிரின்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நிதி உதவி செய்து வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications