முக்கியமான தொழில்நுட்பத் தளங்கள், நிதி நிறுவனங்கள், சுகாதார சேவைகள் மற்றும் அரசாங்க இணையதளங்கள் உட்பட 184 மில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் டேட்டா பிரீச் மூலம் அம்பலமாகியுள்ளன. இப்படி ஒரு டேட்டா பிரீச் நடந்துள்ளதை இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான ஜெரேமியா ஃபோவ்லர் கண்டுபிடித்துள்ளார்.
டேட்டா பிரீச் என்றால் என்ன?: டேட்டா பிரீச் என்றால் தமிழில் தரவு கசிவு என்று கூறுவார்கள். ஒருவருடைய தனிப்பட்ட தகவல்கள் அதாவது அவர்களுடைய மொபைல் நம்பர், ஈ-மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவை அங்கீகரிக்கப்படாத நபர்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவதை தான் டேட்டா பிரீச் என்று கூறுகின்றனர். இது போன்ற தகவல்களை அனுமதியின்றி மோசடிக்காக பயன்படுத்துவார்கள். இந்தக் கசிவுகள் தனிநபர்களுக்கு நிதி இழப்பு, அடையாளத் திருட்டு, மோசடி போன்ற பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஜெரேமியா ஃபோவ்லர் பாதுகாப்பற்ற முறையில் இணையதளம் ஒன்று இருந்ததை முதலில் கண்டறிந்தார். இந்த தளத்தில் மெயில் முகவரிகள், பாஸ்வேர்டுகள், URL-கள் மற்றும் உள் நுழைவதற்கு தேவைப்படும் சான்றுகள் போன்ற அனைத்தும் டெக்ஸ்ட் வடிவில் சேமிக்கப்பட்டிருந்தன. இப்படி பார்த்து தான் ஆராய்ச்சியில் இறங்கினர்.
அதில் தான் பல பிரபலமான தளங்களில் டேட்டா கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆப்பிள், கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட் போன்ற பிரபலமான தளங்களும் இதில் அடங்கும். இந்த விளைவுகள் சமூக ஊடகங்களுக்கு மட்டுமின்றி வங்கி கணக்குகள், சுகாதார இணையதளங்கள், கார்ப்பரேட் அமைப்புகள் அரசாங்க சேவைகளுக்கான இணையதளங்கள் என அனைத்தையும் குறிவைத்து நடந்துள்ளது. இதனால் மோசடி, அடையாளத் திருட்டு, தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் எழத் தொடங்கியுள்ளது.
இந்தத் தளங்களில் இருந்து முக்கியமான டேட்டாக்களை லும்மா ஸ்டீலர் போன்ற தகவல் திருடும் மால்வேர்களை பயன்படுத்தி சேகரித்திருப்பதாக யூகிக்கப்படுகிறது. லும்மா ஸ்டீலர் என்பது ஒரு வகையான மால்வர். இந்த மால்வர் டிவைஸ்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயனரின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் நிதி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இது ஒரு தீங்கிழைக்கும் சாஃப்ட்வேர். டேட்டாக்களை எடுத்து டார்க் வெப்பில் விற்பனை செய்கின்றனர். அதில் இருக்கும் இணைய மோசடிக்காரர்கள் ஆன்லைன் மோசடிகள் மற்றும் பிற தாக்குதல்களில் ஈடுபட அவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால் இது போன்ற தரவுத்தளங்களில் இருந்து எடுக்கப்படும் டேட்டாக்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கவில்லை. என்க்ரிப்ட் செய்யப்பட்டிருந்தால் அந்த டேட்டாக்களை கண்டறிவது சற்று சிக்கலாக இருக்கும். ஆனால் என்கிரிப்ட் செய்யாமல் இருப்பதால் அதை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுகக் கூடிய வகையில் உள்ளது.
டேட்டா கசிவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க சில நபர்களை ஜெரேமியா தொடர்பு கொண்டுள்ளார். ஆக இது போன்ற டேட்டா பிரீச் ஏற்பட்டது உண்மையானது என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தினார். வணிக உள் நுழைவு விவரங்களும் இந்த டேட்டா கசிவில் அடங்கும்.
இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் மக்கள் உடனடியாக தங்களுடைய விவரங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பல தளங்களில் சிலர் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துகின்றனர். ஒரு கணக்கை அணுகினால் ஹேக்கர்கள் அதே சான்றுகளைப் பயன்படுத்தி மற்ற தளங்களிலும் பயன்படுத்தலாம்.
இணையக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் ஒவ்வொரு கணக்கிருக்கும் தங்களால் முடிந்த வரையில் ஸ்ட்ராங் பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துவது சிறந்தது. பாஸ்வேர்டைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது உங்களுடைய பாஸ்வேர்டை யாரும் அணுகாமல் தடுக்கும். கூகுளின் பாஸ்வேர்ட் செக் அப் போன்ற கருவிகளை பயன்படுத்தினால் ஒரு வேலை உங்களின் சான்றுகள் இணையத்தில் கசிந்திருந்தாலும் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications