மொபைல் உற்பத்தி மற்றும் மின்னணு உதிரிப் பாகங்கள் உற்பத்தி சர்ந்த, ஊக்கமளிப்பு திட்டத்தினை கடந்த ஆண்டு (PLI) மத்திய அரசு அறிவித்தது.
இந்த உற்பத்தி சார்ந்த ஊக்க நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், மொத்தம் 19 ஐடி ஹார்டுவேர் நிறுவனங்கள் விண்ணப்பத்தினை தாக்க செய்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு 01.04.2021 முதல் சலுகைகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கொடி கட்டி பறந்து வரும் IT ஹார்டுவேர் நிறுவனங்கள், அரசின் இந்த சலுகை மூலம் மேற்கொண்டு சலுகைகளை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
5 அண்டை நிறுவனங்கள்
அதெல்லாம் இந்த சலுகை திட்டத்தின் மூலம் சலுகைகளை பெறப்போகும் அந்த 19 நிறுவனங்கள் யாவை? இதனால் இந்த ஐடி ஹார்டுவேர் மற்றும் மின்னணு உற்பத்தி துறையினருக்கு என்ன சலுகை? என்ன விவரங்கள் வாருங்கள் பார்க்கலாம். இதில் ஐடி ஹார்டுவேர் பிரிவில் டெல் (dell), விஸ்ட்ரான் ICT(wistron), ஃப்ளெக்ஸ்டிரானிக்ஸ் (Flextronics), ரைசிங் ஸ்டார்ஸ் ஹைடெக் (பாக்ஸ்கான் - Foxconn) மற்றும் லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
உள்நாட்டு நிறுவனங்களின் பட்டியல்
டிக்ஸான் (Dixon)
இன்ஃபோபவர் (JV of Sahasra and MiTAC)
பகவதி (Micromax)
சிர்மா (Syrma)
ஆர்பிக் (Orbic)
நியோலின்க் (Neolync)
ஆப்டீமஸ் (Optiemus)
நெட்வெப் (Netweb)
VVDN
ஸ்மைல் எலக்ட்ரானிக்ஸ் (Smile Electronics)
பனாச் டிஜிலைஃப் (Panache Digilife)
ஹெச் எல் பி எஸ் (HLBS)
ஆர் டி பி (RDP Workstations)
கோகோனிக்ஸ் (Coconics)
பெரியளவில் வளர்ச்சி பெறும்
மேற்கண்ட இந்திய நிறுவனங்கள் அரசின் இந்த பிஎல்ஐ திட்டத்தில் கிடைக்கும் சலுகையினை பயன்படுத்தி, ஐடி ஹார்டுவேர் துறையில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியினை எட்டலாம். இதனால் பல இந்தியா நிறுவனங்கள் எதிர்காலத்தில், அண்டை நாடுகளிலும் தங்களது வணிகத்தினை விரிவுபடுத்தலாம். இதில் ஏற்கனவே சில நிறுவனங்கள் பெரியளவில் உற்பத்தி செய்து வரும் நிலையில், இன்னும் பிரம்மாண்ட வளர்ச்சியினை காண இந்த திட்டம் உதவும். அதோடு இந்த நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த உலகின் மிகச்சிறந்த மின்னணு உற்பத்தி மையங்களாக மாறலாம்.
மிகப்பெரிய ஊக்கம்
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற தொலை நோக்கு திட்டங்களின் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு உற்பத்தியில் முன்னோடியில்லாத வளர்ச்சியினை இந்தியா கண்டுள்ளது. அதோடு பிஎல்ஐ திட்டமும் இந்தியாவின் ஐடி ஹார்டுவேர் துறைக்கு ஒரு மாபெரும் வளர்ச்சியினை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் விரிவுபடுத்துதோடு, வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications