மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இதன் மூலம் ஹோட்டல் , சிறிய உணவகங்கள் உரிமையாளர்களை நேரடியாக பாதிக்கும்.
மேலும் இந்த விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் கீழ் இருக்கும் எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர் விலையை திருத்தம் செய்து வருகிறது.

இதன் நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள 100 ரூபாய் உயர்வு மூலம் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை 1,833 ரூபாய். இதேபோல் கொல்கத்தாவில் ரூ.1,943 ஆகவும், மும்பையில் ரூ.1,785 ஆகவும், பெங்களூரில் ரூ.1,914.50 ஆகவும், சென்னையில் ரூ.1,999.50 ஆகவும் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதத்தில் இதன் விலையை 209 ரூபாய் உயர்த்தப்பட்டது. மேலும் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை உயரவில்லை.
அக்டோபர் விலை உயர்வு மூலம் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை 1,731.50 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 1,833 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் அக்டோபர் மாதம் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை கொல்கத்தாவில் ரூ.1,839.50, மும்பையில் ரூ.1,684, பெங்களூரில் ரூ.1,839 மற்றும் சென்னையில் ரூ.1,898 அளவில் இருந்தது.
செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலையை 157 ரூபாய் அளவுக்கு குறைத்தது. 14.2-கிலோ வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் விலை மாறாமல் இருக்கும் வேளையில் நவம்பர் மாதம் டெல்லியில் ரூ.903, கொல்கத்தாவில் ரூ.929, மும்பையில் ரூ.902.50, பெங்களூரில் ரூ.905, சென்னையில் ரூ.918.50 ஆகிய விலைகளில் வர்த்ததம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications