அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் H-1B விசா திட்டத்தின் புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு எதிராக 19 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. கலிஃபோர்னியா மற்றும் மாசச்சூசெட்ஸ் மாகாணங்கள் முன்னிலை வகிக்கும் இந்த வழக்கு மாசச்சூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
ஹெச்1பி விசா மீது 1 லட்சம் கட்டணம் விதித்த நாள் முதல் அதிகளவில் புலம்வது ஐடி ஊழியர்கள் தான், இக்கட்டணத்தால் அமெரிக்காவுக்கு லேலைக்கு செல்லும் வாய்ப்பு பெரிய அளவில் குறையும். சொல்லப்போனால் ஹெச்1பி விசாவை முக்கியமாக வைத்து வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது வர்த்தக திட்டத்தையே மாற்றியுள்ளது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் 19 மாகாணங்கள் டிரம்ப்-ன் 1 லட்சம் டாலர் கட்டணம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு குறித்தும், விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும் முழுமையாக பார்ப்போம். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு தோல்லி அடைந்தால் இக்கட்டண உயர்வு நீக்கப்படும்.
H-1B விசா திட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை சிறப்பு பணிகளுக்கு பணியமர்த்த அனுமதிக்கிறது. இது குறிப்பாக டெக் துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றன. இந்த திட்டம் அமெரிக்காவில் திறன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும், டெக் துறையில் வேகமாக வளர்ச்சி அடையவும் உதவுகிறது. ஆனால் டிரம்ப் நிர்வாகம் இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக கருதி கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தற்போது டிரம்ப் அரசு புதிதாக அறிவிக்கப்பட்ட 100,000 டாலர் கட்டணம் பொது துறை நிறுவனங்களான பள்ளிகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பெரிய சுமையாக அமையும் என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. H-1B விசா மூலம் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்துகின்றன. இக்கட்டணத்தால் இது தடைபடும் அல்லது குறையும் என விவாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா கூறுகையில், இந்த கட்டணம் சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் இது மாநில சேவைகளை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
இது மூன்றாவது வழக்கு - முன்பு அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ், யூனியன்கள் போன்றவை வழக்கு தொடர்ந்தன.
இதுக்குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் இந்த கட்டணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று கூறினார். H-1B திட்டத்தை சீர்திருத்துவதற்கான முதல் படியாக இது உள்ளது என்று விளக்கினார். அமெரிக்க ஊழியர்களை முதலில் பாதுகாக்க இது உதவும் என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ஆனால் மாகாணங்கள் இது காங்கிரஸ் அதிகாரத்தை மீறியது என்று வாதிடுகின்றன.
இந்த வழக்கு அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். H-1B விசா திட்டம் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி துறைகளுக்கு முக்கியமானது. 1 லட்சம் டாலர் கட்டணம் அமலானால் திறன் கொண்ட ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவது குறையும். இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம். வழக்கு முடிவு H-1B திட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications