இன்றைய இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போதே வேலை செய்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில் 19 வயது இளைஞர் ஒருவர் படித்து கொண்டிருக்கும்போதே மாதம் $10,000 சம்பாதிக்கின்றார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த இளைஞர் யார்? என்ன வேலை செய்கிறார்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
19 வயது இளைஞர்
இளைஞர்களுக்கு தற்போது சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பதும், பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போதே சம்பாதிக்க தொடங்கி விடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 19 வயது இளைஞர் ஒருவர் பொறுப்புடன் படித்துக் கொண்டே வேலை செய்து வருகிறார் என்றும் அவரது மாத வருமானம் $10,000 என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதம் $10,000
நியூயார்க்கை சேர்ந்த அராஷ் லஹிஜானி என்பவர் தற்போது படித்து கொண்டிருக்கும் ஒரு மாணவராக உள்ளார். ஓய்வு நேரங்களில் வீடியோ கேம் கேரக்டருக்கு பின்னணி கதை எழுதும் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் $10,000 சம்பாதிக்கிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ கேம் கேரக்டர்கள்
ஃப்ரீலான்ஸ் மூலம் வேலை செய்யும் அவர் இந்த வேலையை தற்செயலாக தனது நண்பரிடம் இருந்து தெரிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் இந்த பணியை கடந்த சில மாதங்களாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தான் இந்த பணியை செய்து வருவதாகவும் இதுவரை 400க்கும் மேற்பட்ட வீடியோ கேம் கேரக்டர்களுக்கு பின்னணி கதையை எழுதி உள்ளதாகவும் இதுவரை $62,400 தான் சம்பாதித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கதை எழுதுதல்
வீடியோ கேம் கேரக்டர்களுக்கு கதை எழுதுதல் மூலம் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடியும் என்று தனக்கு தெரியாது என்றும், நான் பள்ளியில் படிக்கும் போது தற்செயலாக இந்த பணியை தான் தெரிந்து கொண்ட பின்னர் அதை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
15 வயது குழந்தைகள் முதல் 50 வயது முதியவர்கள் வரை தனது கதையை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்றும் தனது கதை அனைவராலும் ரசிக்கப்படுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு வீடியோ கேரக்டர் பின்னணி கதையை எழுதுவதற்கு ஒரு வாரம் வரை எடுக்கும் என்றும் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் எழுதுவேன் என்றும் வார இறுதி நாட்களிலும் எழுதுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications