பெரிய பெரிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் இளநிலை, முதுநிலை என அடுத்தடுத்த பட்டப்படிப்புகளை முடிக்கின்றனர் , ஆனால் இங்கு ஒரு பெண் பட்டப்படிப்பே படிக்காமல் 19 வயதிலேயே முன்னணி கார் பிராண்டான பிஎம்டபிள்யூ- வில் வேலை பெற்றிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்காக பேசப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது. கௌரி என்ற 19 வயது பெண் கண்டண்ட் கிரியேட்டராக இருக்கிறார். இவர் தனக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாக லிங்குடினில் பதிவு செய்திருக்கிறார். அதுவும் முழு நேர மார்க்கெட்டிங் வேலை கிடைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

டிகிரி கூட முடிக்காத எனக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்னிடம் முழு நேர பணி அனுபவம் கூட இல்லை என சுட்டிக் காட்டி இருக்கிறார். சோஷியல் மீடியாவில் என்னுடைய புரோஃபைல் தான் இவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை பெற்று தந்து இருக்கிறது என கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரம் ஃபாலோவர்கள், லிங்குடினில் 65,000 ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.
பெர்சனல் பிராண்டிங் தான் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை பெற்று தந்தது என கூறியிருக்கும் கௌரி டிகிரி, பணி அனுபவம் இல்லை என்னுடைய பெர்சனல் பிராண்டிங்கும் ஆன்லைன் பிரன்ஸும் தான் எனக்கான போர்ட்போலியோவாக உருவெடுத்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.
கௌரியின் இந்த பதிவு யாராலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் தற்போது பாரம்பரியமான பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் முறைகள் மாற்றம் கண்டு வருகிறதா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட முறையில் திறன்களை வளர்த்து கொள்வது தான் இனி வேலைக்கு உதவுமோ என்ற விவாதத்தை எழுப்புகிறது.
பெர்சனல் பிராண்டிங் ,நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்வது, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுவது உள்ளிட்ட அவற்றின் மூலம் தான் தற்போது நிறுவனங்களும் ஊழியர்களை வேலைக்கு எடுத்து கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் அனைத்து வேலைகளுக்குமே இது பொருந்தாது என்பதே உண்மை. மார்க்கெட்டிங், சோஷியல் மீடியோ மேனேஜ்மெண்ட், டிஜிட்டல் மார்க்கெடிங் போன்ற பணிகளுக்கு வேண்டுமானால் டிகிரி தேவையில்லாமல் போகலாம் என சிலர் கருத்து கூறுகின்றனர்.
ஏற்கனவே ஏராளமான கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர், மறுபுய்றம் நிறுவனங்கள் ஊழியர் பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில் தான் டிகிரி படிப்புக்கு செலவு செய்த பணமும், செலவு செய்த காலமும் வீண் தானா என பலரும் புலம்புகின்றனர், இந்த சூழலில் கௌரியின் இந்த பதிவு கவனம் பெறுகிறது.


Click it and Unblock the Notifications