டெல்லி: 1990களில் மத்திய அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தியது. இது தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இது ஒட்டு மொத்த தேசம் மட்டுமில்லாமல் , குறிப்பிட்ட சில மாநிலங்களின் வளர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது.
இந்த பொருளாதார சீர்திருத்தங்களால் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பலனடைந்துள்ளன என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு 1990களில் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு பிறகு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 1990 இல் மத்திய அரசு கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சிறந்த பலனை அளித்துள்ளன என கூறியுள்ளது.
1990 - 91 மற்றும் 2023 - 24 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை இந்த அறிக்கையானது குறிப்பிடுகிறது. இதன்படி நாட்டிலேயே தேசிய ஜிடிபிக்கு அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
1990 -91 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் தேசிய ஜிடிபி பங்களிப்பு 14.6 சதவீதமாக இருந்தது தற்போது அது சற்றே குறைந்து 13.3 சதவீதமாக இருக்கிறது. இருந்தாலும் தேசிய அளவில் அதிக ஜிடிபி பங்களிக்கும் மாநிலமாக தொடர்ந்து மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது 1960 - 61 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி பங்களிப்பு 8.7 சதவீதமாக இருந்தது இது 1990 - 91 ஆம் ஆண்டில் 7.1 சதவீதம் என குறைந்திருந்தது. அதுவே தற்போது 8.9 சதவீதம் என உயர்ந்திருக்கிறது.
அடுத்ததாக இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் குஜராத் மாநிலம் இருக்கிறது 1991 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த குஜராத் மாநிலத்தின் ஜிடிபி பங்களிப்பு தற்போது 8.1 சதவீதம் என அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலில் கர்நாடக மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் ஜிடிபி பங்களிப்பு 5.3 சதவீதம் மட்டுமே இருந்தது ஆனால் பெங்களூரு மாநகரத்தின் வளர்ச்சி காரணமாக இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி அடைந்து தேசிய பங்களிப்பு 8.2% என உயர்வு கண்டுள்ளது.
அதே வேளையில் 1991 ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் அதிகபட்சமாக 12.6 சதவீத ஜிடிபி பங்களிப்பை தந்திருந்தது. அப்போது இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்த உத்தரபிரதேசம் தற்போது 8.4 சதவீதம் ஜிடிபி பங்களிப்பு குறைந்து 3ஆவது இடத்திற்கு சென்றுவிட்டது. மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களின் ஜிடிபி பங்களிப்பு 1990 உடன் ஒப்பிடும்போது தற்போது சுமார் 30 சதவீதம் அளவு குறைந்து இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications