இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கல் கொள்கை மூலம் செதுக்கிய சிற்பி மன்மோகன் சிங். 1991 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையிலான ஒரு பட்ஜெட்-ஐ தாக்கல் செய்து இந்தியப் பொருளாதாரத்தைத் திவால் ஆகாமல் காத்தது மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் வரையில் தடாலடியாக உயர்த்திய மாமேதை தான் மன்மோகன் சிங். ஆனால் இந்த பட்ஜெட்-க்கு சொந்த கட்சியில் இருந்து பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதைத் தனி ஆளாகக் கையாண்டவர் டாக்டர்.மன்மோகன் சிங்.
பிவி நரசிம்மராவ் தலைமையிலான அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் தான் டாக்டர்.மன்மோகன் சிங், இவர் இதற்கு முன்பு ஆர்பிஐ கவர்னராகவும் இருந்த காரணத்தால் நாட்டின் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து முழு புரிதல் இருந்தது. குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தி வந்த நிதி பற்றாக்குறை-யின் வீரியத்தை முழுமையாகத் தெரிந்துவைத்திருந்தார் மன்மோகன் சிங்.

1991 இல் மன்மோகன் சிங்கின் வரலாற்றுச் சீர்திருத்தங்கள் அடங்கிய தாராளமயமாக்கல் கொள்கை அடங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்து இந்தியாவைத் திவால் நிலையிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாக அதன் பாதையை மாற்றினார்.
ஜூலை 25, 1991 அன்று, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்த பட்ஜெட் குறித்து மக்கள் மத்தியில் பெரும் விமர்சனம், அச்சம் இருந்தது. இதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும், மக்களுக்கு இந்த பட்ஜெட்டின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிய வைக்க வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்தார். இதற்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி அதில் அவரே தலைமை தாங்கினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் பட்ஜெட்டில் ஆர்வமில்லாத அதிகாரிகளால் சிதைக்காமல் இருப்பதை உறுதிசெய்தார்.
இது மட்டும் அல்லாமல் இக்கூட்டத்தில் பட்ஜெட் குறித்து சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் விளக்கினார், இது 'மனித முகம் கொண்ட பட்ஜெட்' என்றும் கூறினார். உரம், பெட்ரோல் மற்றும் எல்பிஜி விலைகளை உயர்த்துவதற்கான காரணத்தையும், அதன் அவசியத்தையும் முன்வைத்தார். இதை ஜெய்ராம் ரமேஷ் 2015 இல் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் விவரித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் 1991 தாராளமயமாக்கல் பட்ஜெட்-க்கு பெரும் எதிர்ப்பும், விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட குழப்பத்தை உணர்ந்த அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், ஆகஸ்ட் 1, 1991 அன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் கூட்டத்தைக் கூட்டி, கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய குறைகளையும், விமர்சனங்களையும் வெளிப்படையாக முன்வைக்க அனுமதிக்க முடிவு செய்தார்.
இந்த முக்கியமான கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் அடுக்கடுக்கான கேள்விகளை சிங்கிள் மேன் ஆர்மியா மன்மோகன் சிங் எதிர்கொண்டு பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் பதில் அளிப்பதில் பிரதமர் நரசிம்ம ராவ் விலகி இருந்தார் மற்றும் மன்மோகன் சிங்கைத் நேரடியாக எதிர்கொள்ள அனுமதித்தார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் மேலும் இரண்டு சந்திப்புகள் நடந்தன அதிலும் சிங்கிள் மேன் ஆர்மியா மன்மோகன் சிங் அனைத்து கேள்விகளையும் எதிர்கொண்டார்.
மன்மோகன் சிங்கின் 1991 தாராளமயமாக்கல் பட்ஜெட்டை மணிசங்கர் அய்யர் மற்றும் நாதுராம் மிர்தா ஆகிய இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே முழு மனதுடன் ஆதரித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications