தீபாவளிப் பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு திங்கள் கிழமை பண்டிகை வருவதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது, பெருநகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகைகள் கொண்டாடுவதை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் வசதிக்காக இன்று அக்டோபர் 17 முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை, மொத்தம் 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து 2,675 சிறப்புப் பேருந்துகள் : இந்தச் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகளில், கோவை மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பணிபுரியும் வெளிமாவட்ட மக்கள், எந்தவித சிரமமுமின்றித் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2,675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தச் சிறப்புப் பேருந்துகள் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இயக்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பேருந்து நிலையங்களில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும், கோவையின் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து, எந்தெந்த இடங்களுக்குப் பேருந்துகள் புறப்படும் என்ற விவரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் : இங்கிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும்.
சூலூர் பேருந்து நிலையம் : திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் கரூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் சாலை புதுப் பேருந்து நிலையம் : ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற மலைப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இங்குத் தயாராக இருக்கும்.
காந்திபுரம் சென்ட்ரல் பேருந்து நிலையம் : இந்த மையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு மற்றும் திருப்பூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
உக்கடம் : பொள்ளாச்சி, உடுமலை, பழனி மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.
மேலும், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துத் தனியார் ஆம்னி பேருந்துகளும் கூட, போக்குவரத்துக் கழகத்தின் அறிவிப்பின்படி, கொடிசியாவில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவான ஏற்பாடுகள், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications