டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு வந்த இரண்டு வியாபாரிகள், அதிகாரிகளிடம் வம்பு செய்து மாட்டிக் கொண்டனர். குஜராத்தை சேர்ந்த அந்த இரண்டு வியாபாரிகளும் டெல்லியில் சரக்குகளை வாங்க வந்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் அவர்களது லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்களை இந்த இருவரும் கேலி செய்தனர். அதில் ஒருவர் தனது பேக்கில் அணுகுண்டு இருப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவர்களை தனியாகக் கொண்டு அதிகாரிகள் செமயாக விசாரித்தனர்.

அதற்கு அவர்கள் தாங்கள் உண்மையிலேயே வியாபாரிகள் என்றும் சும்மா கேலிக்காக அப்படி குண்டு வைத்திருப்பதாகச் சொன்னதாகவும் கூறினர்.
இருவரும் குஜராத்தின் ராஜ்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள். டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கு அவர்கள் செல்லவேண்டும். விசாரணையில் அவர்களது பெயர்கள் ஜிக்னேஷ் மலன், காஷ்யப் குமார் லாலானி என்று தெரிய வந்தது.
அதிகாரிகள் நீண்டநேரமாக தங்களது உடைமைகளை சோதித்ததால் வெறுப்படைந்து அவர்களை கேலி செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் மீது அதிகாரிகளை திசைதிருப்ப தவறான தகவல்களை அளித்ததாகவும், பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களை கண்டித்து அனுப்பிவிட்டு எப்போது கூப்பிட்டாமல் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜர் ஆகவேண்டும் என்று எச்சரிக்கப்பட்டனர்.
இதுபற்றி இந்திரா காந்தி விமான நிலைய காவல் டெபுடி கமிஷனர் உஷா ரங்கநானி கூறுகையில், தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த பயணிகள் இருவரும் வியாபாரிகள் என்றும் ராஜ்காட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
குஜராத்தில் கட்டுமான கான்ட்ராக்டர்களாக உள்ளனர். டெல்லியில் உள்ள துவாரகாவில் ஒரு பிசினஸ் பார்ட்னரைப் பார்த்து விட்டு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் உபகரணங்களை வாங்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த இரு வியாபாரிகளையும் பாதுகாப்புப் பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்யும்போது சதா அவர்களிடம் பேசி அலைக்கழித்து உள்ளனர். சோதனை பற்றி அவர்களிடம் விமான நிலைய ஊழியர்கள் விளக்கிக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் மீது வியாபாரிகள் கோபத்தைக் காட்டினர். அதுமட்டுமல்லாமல் ஊழியர்களை அவர்கள் தரக்குறைவாக கேலியும் செய்தனர்.
அப்போதுதான் ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் மிரண்டுபோன விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக இது பற்றி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். அதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இருவரையும் தனியே அழைத்து கடுமையாக விசாரித்துள்ளனர்.
விமான நிலையத்தில் இதுபோன்ற பாதுகாப்பு சோதனையில் ஈடுபடும் ஊழியர்களிடம் தரக்குறைவாகவோ அல்லது கேலி செய்யவோ கூடாது என்பது இந்த சம்பவம் மூலம் பிறருக்குத் தெரியட்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications