எல்லோரும் எதிர்பார்த்தபடியே சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் மீண்டும் தன்னை 3வது முறையாக அந்நாட்டின் அதிபராக அறிவித்துக்கொண்டார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவில் மொத்தம் 7 பேர், இந்த 7 பேர் கொண்ட குழுவை Politburo Standing Committee என அழைக்கப்படுகிறது.
இக்குழவின் தலைவர் தான் சீனா-வின் அதிபராக நியமிக்கும் அதிகாரத்தைப் பெறுவார். இப்படி இக்குழுவின் தலைவராக இருப்பவர் ஜி ஜின்பிங்.
ஜி ஜின்பிங்
ஆட்சியில் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தும் ஜி ஜின்பிங், தன்னை மீண்டும் 5 ஆண்டுக்கு அதிபராக அறிவித்துக்கொண்டார். இதன் மூலம் சீனாவில் தொடர்ந்து 3வது முறையாக அதிபராகியுள்ளார், இதோடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான Mao Zedong-கிற்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த தலைவராக உயர்ந்துள்ளார்.
Politburo குழு
ஜி ஜின்பிங் ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனே லி கியாங், ஜாவோ லெஜி, வாங் ஹுனிங், காய் குய், டிங் க்ஸூசியாங் மற்றும் லி ஷி ஆகியோர் Politburo குழுவில் நியமித்தார். இதில் ஜாவோ லெஜி, வாங் ஹுனிங் ஆகியோர் மட்டுமே பழையவர்கள் மற்ற அனைவரும் புதியவர்கள் ( ஜி ஜின்பிங் ஆதரவாளர்கள்).
ஜிடிபி வளர்ச்சி
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 3.9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஜூன் காலாண்டில் சீனா வெறும் 0.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
சீனாவின் ஜிடிபி தரவுகளை அக்டோபர் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகத் திட்டமிட்டு இருந்த நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டுக் கூட்டம் நடக்க இருக்கும் காரணத்தால் ஜிடிபு தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆனது.
கோவிட் லாக்டவுன்
சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருந்தாலும் கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள், லாக்டவுன் ஆகியவை பெரும் பாதிப்பைக் கடந்த ஒரு மாதத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகச் சீனா பல்வேறு வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications