நவம்பர் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் வரும் புது மாற்றங்கள்..!

சென்னை: நவம்பர் 1ஆம் தேதி முதல் யுபிஐ சேவைகளில் இரண்டு முக்கிய மாற்றங்கள் வர இருக்கின்றன. இந்தியாவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 2019 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் ஆண்டுதோறும் 75% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆக்சிஸ் செக்யூரிட்டி அண்மையில் வெளியிட்ட தகவல் கூறுகிறது.

இந்த நிலையில் யுபிஐ பயனாளர்களுக்கு வரும் 1ஆம் தேதி முதல் இரண்டு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதன்படி ஆட்டோ டாப் அப் என்ற ஒரு புதிய அம்சம் யுபிஐ லைட்டில் (UPI LITE) அறிமுகம் செய்யப்படுகிறது.

நவம்பர் 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் வரும் புது மாற்றங்கள்..!

இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) எனப்படும் என்பிசிஐ (NPCI) அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் யுபிஐ லைட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்ஸாக யுபிஐ லைட்டில் வைத்துக் கொள்ளலாம். அந்த மினிமம் பேலன்ஸ் குறையும்போது தானாகவே யுபிஐ லைட்டில் அந்த பேலன்ஸ் சேர்ந்து விடும். யுபிஐ லைட் பயன்படுத்துபவர்கள் பின் நம்பரை வழங்காமல் 500 ரூபாய்க்கு உள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை யுபிஐ லைட்டில் பேலன்ஸ் ஆக வைத்துக் கொள்ள முடியும்.

எனவே திடீரென யுபிஐ லைட்டினை பயன்படுத்தும் போது அதில் போதிய தொகை இல்லை என்ற சிரமம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்டோ டாப் வேண்டாம் என்றால் அதற்கான ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் பத்திரங்களின் பொது வெளியீடுகளுக்கான விண்ணப்ப செயல் முறையை எளிதாக்கும் நோக்கில் செபி தனிநபர் முதலீட்டாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இதுபோன்ற கடன் பத்திரங்களில் விண்ணப்பிக்கும் போது அதற்கான நிதியை பிளாக் செய்வதற்கு யுபிஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

இது நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அத்தகைய பத்திரங்களின் பொது வெளியிட்டில் அதாவது தனிநபர் முதலீட்டாளர்கள் பதிவு செய்யப்பட்ட பங்கு தரகர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள், பரிமாற்ற முகவர்கள் ஆகியோர் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆனால் அதற்கான நிதிகளை பிளாக் செய்வதற்கு யூபிஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என செபி தன்னுடைய சுற்றறிக்கையில் கூறுகிறது. இது போன்ற இடைத்தரகு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கினை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+