கேரளா விவேக், பஞ்சாப் நிக்கி: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 இந்திய வம்சாவளியினர் போட்டி, யார் இவர்கள்?

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பாக 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக விவேக் ராமசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே முதலீட்டாளர் பில் அக்மேன் விவேக் ராமசாமி குறித்து வெளியிட்ட கருத்துக்கள் அந்நாட்டு முதலீட்டுச் சந்தையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 37 வயதான கோடீஸ்வரரும், இந்தியருமான விவேக் ராமசாமி அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நிக்கி ஹேலி போட்டியிடுவதாக அறிவித்தார்.

யார் இந்த விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி..?

அமெரிக்கக் குடியுரிமை

அமெரிக்கக் குடியுரிமை


விவேக் ராமசாமி ஆகஸ்ட் 9, 1985 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி பகுதியில் பிறந்து வளர்ந்தார். அமெரிக்காவில் பிறந்த காரணத்தால் அமெரிக்கக் குடிமானாக உரிமை பெற்ற காரணத்தால் அமெரிக்க அரசியலில் தீவிரமாகச் செயல்பட வாய்ப்பை பெற்றுள்ளார்.

கேரள மாநிலம்

கேரள மாநிலம்

விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள். இவருடைய பெற்றோர் இளம் வயதிலேயே வேலைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் விவேக் ராமசாமி பிறந்த உடன் அங்கேயே குடியுரிமை பெற்று செட்டிலாகியுள்ளனர்.

விவேக் ராமசாமி பெற்றோர்கள்

விவேக் ராமசாமி பெற்றோர்கள்

விவேக் ராமசாமி-யின் தந்தை வி.ஜி. ராமசாமி, கேரளாவில் உள்ள ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் ஓஹியோவின் ஈவென்டேலில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் ஆலையில் பணிபுரிந்தார். அவரது தாயார் கீதா, சின்சினாட்டியில் முதியோர் மனநல மருத்துவராக இருந்தார்.

விவேக் ராமசாமி பிஸ்னஸ்

விவேக் ராமசாமி பிஸ்னஸ்

விவேக் ராமசாமி அமெரிக்கத் தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். 2022 இல், அவர் ஸ்டிரைவ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை இணைந்து நிறுவினார் மற்றும் தற்போது செயல் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஸ்டிரைவுக்கு முன், அவர் உயிரி மருந்து நிறுவனமான Roivant Sciences ஐ நிறுவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல புத்தகத்தை எழுதியுள்ளார்.

மனைவி

மனைவி

விவேக் ராமசாமி-யின் மனைவி அபூர்வா திவாரி ராமசாமி. இவர் Ohio State University Wexner Medical Center-ல் உதவி பேராசிரியர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், இப்போதே அதற்கான போட்டி உருவாகியுள்ளது. இந்திய அமெரிக்கரான கமலா ஹாரிஸ் வெற்றியை தொடர்ந்து அமெரிக்க அரசியல் வட்டத்தில் அதிகப்படியான இந்தியர்கள் நியமிக்கப்பட்டு பெரிய அளவிலான நன்மை உருவானது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தல்

2024 அமெரிக்க அதிபர் தேர்தல்

இந்த நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க இந்தியர்கள் நேரடியாக அதிபர் பதவிக்குப் போட்டிப்போட துவங்கியுள்ளனர். இது அமெரிக்க அரசியல் வட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரிபப்ளிகன் கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரட்டிக்

ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரட்டிக்

அமெரிக்காவின் பிரதான அரசியல் கட்சிகளான ரிபப்ளிகன் மற்றும் டெமாக்ரட்டிக் இரண்டும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டும் என்பதற்காக அனைத்து பிரிவுகளை இணைக்கும் முக்கியமான நபரை தான் அதிபர் வேட்பாளராக அறிவிக்கும். இதற்குக் கட்சிகளுக்கு உள்ளேயே போட்டிகள் இருக்கும்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அந்த வகையில் ரிபப்ளிகன் கட்சியில் ஏற்கனவே டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டிப்போடுவதாக அறிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பும் இந்திய வம்சாவளியை சேர்ந்த Nikki Haley அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

நிக்கி ஹேலி

நிக்கி ஹேலி

நிக்கி ஹேலி, ஜனவரி 20, 1972 இல், தென் கரோலினாவில் உள்ள பாம்பெர்க் கவுண்டி மருத்துவமனையில் பிறந்தார். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து குடியேறிய சீக்கியப் பெற்றோருக்கு நிமரதா நிக்கி ரந்தாவா பிறந்தார்.

நிக்கி ஹேலி பெற்றோர்

நிக்கி ஹேலி பெற்றோர்

அவரது தந்தை, அஜித் சிங் ரந்தாவா மற்றும் அவரது தாயார், ராஜ் கவுர் ரந்தாவா, இந்தியாவின் பஞ்சாப், அமிர்தசரஸ் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர். அவரது தந்தை பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார், மேலும் அவரது தாயார் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.

நிக்கி ஹேலி கல்வி, வேலை

நிக்கி ஹேலி கல்வி, வேலை

நிக்கி ஹேலி 1989 இல் தனியார் ஆரஞ்ச்பர்க் பள்ளியில் பள்ளி கல்வியை முடித்து 1994 இல் க்ளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஹேலி FCR கார்ப்பரேஷன், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதன் பிறகு தனது தாயின் ஆடை நிறுவனத்தில் தலைமை நிதியியல் அதிகாரியாகப் பணியாற்றினார்.

நிக்கி ஹேலி கணவர்

நிக்கி ஹேலி கணவர்

நிக்கி ஹேலி 1996 இல் மைக்கேல் ஹேலியை மணந்தார், இதன் பின்பு தான் குடிமை விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 1998 இல், ஆரஞ்ச்பர்க் கவுண்டி சேம்பர் ஆஃப் காமர்ஸின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். 2003 இல் லெக்சிங்டன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் இயக்குநர்கள் குழுவில் நிக்கி ஹேலி முக்கிய உறுப்பினர் ஆனார். நிக்கி ஹேலி 2003 இல் பெண்கள் வணிக உரிமையாளர்களின் தேசிய சங்கத்தின் பொருளாளராகவும், 2004 இல் தலைவராகவும் ஆனார்.

நிக்கி ஹேலி அரசியல் பயணம்

நிக்கி ஹேலி அரசியல் பயணம்

இந்த நிலையில் தான் தென் கரோலினா மாகாணத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். தென் கரோலினா மாகாணத்தின் முக்கியத் தலைவராக மாறியத்து மட்டும் அல்லாமல் தற்போது அமெரிக்க அதிபர் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

ரிபப்ளிகன் கட்சி

ரிபப்ளிகன் கட்சி

ரிபப்ளிகன் சார்பாக ஏற்கனவே டொனால்டு டிரம் போட்டிப்போட உள்ளதாக அவரே அறிவித்த நிலையில், இவருக்குப் போட்டியாக ரிபப்ளிகன் சார்பாகக் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிக்கி ஹேலி அதிபர் வேட்பாளர் இடத்திற்குப் போட்டிப்போட உள்ளனர்.

டெமாக்ரட்டிக் கட்சி

டெமாக்ரட்டிக் கட்சி

இந்த நிலையில் டெமாக்ரட்டிக் சார்பாக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரீஸ் கூட்டணி மீண்டும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. சொல்லப்போனால் ஜோ பைடன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை அவ்வளவு தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+