ராஜஸ்தானை சேர்ந்த ஐஐடி கரக்பூர் பட்டதாரி அனீஷ் ஜெயின். மெக்கின்ஸி அண்டு கம்பெனியின் கன்சல்டண்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு 25 வயது இருக்கும். தனது நல்ல வேலையை விட்டுவிட்டு ராஜஸ்தானில் கேட்ஸ் அறக்கட்டளை நிதியுதவியுடன் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
சிறு, குறு விவசாயிகள் சந்திக்கும் கடுமையான சூழ்நிலை இந்த பட்டதாரியை உலகின் பார்வையை மாற்ற வைத்தது. கடுமையாக விளைவித்த பொருட்களுக்கு கிடைத்த குறைந்த லாபம், குறைவான விளைச்சல் ஆகியவை இப்போது 40 வயதான அனீஷின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அவரது பயணம் மற்றொரு வேலையாக இல்லாமல் புதிய அத்தியாயமாக அமைந்தது. விவசாயத்தின் நுணுக்கங்களையும் விவசாய முறைகளை மாற்றியமைக்கும் வாய்ப்புகளையும் அவர் கற்றறிந்தார்.
இதுபற்றி அனீஷ் கூறுகையில் முன்னதாக நான் எனது கார்ப்பொரேட் வேலைக்கே திரும்ப நினைத்தேன். ஆனால் விவசாயிகளுடனான தொடர்பு எனது முடிவை மாற்றி விட்டது. ஒரு தனிப்பட்ட நபர் மற்றும் புரபஷனலாக நான் அவர்களால் வரவேற்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.
என்னுடன் சேர்ந்து பணியாற்ற அவர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். இதனால் நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களது பிரச்னைக்கு ஒரு தீர்வை அறிய முடிவு செய்தேன் என்றார்.
2013இல் கிராம் உன்னாட்டியை அனீஷ் தொடங்கினார். இது ஒரு விவசாய வேல்யூ செயின் சர்வீஸ் ஆகும். பெரிய நிறுவன கொள்முதலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் விசாயிகள் தங்களது தரமான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்ய கிராம் உன்னாட்டி உதவியுள்ளது. கடந்த நிதியாண்டில் அதன் விற்றுமுதல் ரூ.50 கோடி ஆகும்.
ராஜஸ்தானில் சோயா பீன்ஸ் விவசாயிகளுடனான ஒன்றரையாண்டு உறவு அவர்களது பிரச்னைக்கு தீர்வாக அமைந்தது.
கிராம் உன்னாட்டி ஊழியர்கள் வாரந்தோறும் விவசாயிகளை சென்று சந்தித்து ஆலோசிப்பர். இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதையும் எந்த மாதிரியான விளைபொருட்களை சாகுபடி செய்ய வேண்டும் என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ள ஒரு அமைப்பாக கிராம் உன்னாட்டி அமைந்தது.
நாங்கள் முதலில் டிமாண்ட் என்ன என்பதை அறிந்து அதன்மூலம் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு உதவினோம். அடுத்தகட்டமாக அவர்கள் தரமான விதைகளை பயன்படுத்துகின்றனரா என்பதை உறுதி செய்தோம். பின்னர் அவர்களது தயாரிப்புகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்தோம் என்கிறார் அனீஷ்.
ராஜஸ்தானில் உள்ள சோயா பீன்ஸ், கடுகு விவசாயிகளுடன் கிராம் உன்னாட்டி சேர்ந்து பணியாற்றியது. கிராம் உன்னாட்டியின் சேவையினால் தனது நிலத்தில் விளைச்சல் அதிகரித்ததோடு , நோய் ஏற்படுதல் குறைந்ததாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்ற விவசாயி கூறுகிறார். அத்துடன் கிராம் உன்னாட்டியுடன் இணைந்ததால் தனது வருவாய் கணிசமாகப் பெருகியதாகவும் கூறினார்.
ஒரு புதிய இடத்தில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கிராம் உன்னாட்டி உறுப்பினர்கள் செலவிட்டு விவசாயிகளின் பிரச்னையை அறிந்து கொள்கின்றனர். பிரச்னையை அறிந்த பின்னர் விவசாயிகளின் சாகுபடி முறையை அவர்களது நிலத்துக்கு ஏற்றபடி உருவாக்கித் தருகின்றனர்.
விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களை 100 சதவீதம் கொள்முதல் செய்வதற்கான உத்தரவாதத்தை தருவதாக அனீஷ் கூறுகிறார்.
கிராம் உன்னாட்டி இரண்டு வழிகளில் வேலை செய்கிறது. முதலாவதாக, விதைப்பு அல்லது அறுவடை செய்வதன் மூலம் தற்போதுள்ள பயிர்களில் சிறிய மாற்றங்களைச் செய்கின்றன. இரண்டாவதாக, அந்த காலநிலை மண்டலத்துக்கு ஏற்ற புதிய பயிர்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
காலநிலை மாற்றம் இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதை சமாளிக்கும் விதமாக இருப்பதால், இரண்டாவது விருப்பம் வேகமாக முக்கியத்துவம் பெறுகிறது.
கிராம் உன்னாட்டி இப்போது 8 மாநிலங்களில் தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்புகள், மசாலா பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்று 18 முதல் 20 வகையான பயிர்களை விளைவிக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் விவசாயிகளை அணுக வேண்டும் என்பதுதான் அனீஷின் கிராம் உன்னாட்டியின் இலக்காக உள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications