மும்பை: ஹூரன் ஒவ்வொரு வருடமும் இந்தியத் தொழில்துறை தொடர்பாகவும், பணக்காரர்கள் தொடர்பாகவும் அவ்வப்போது சந்தையின் கள நிலவரத்தை ஆய்வு செய்து புது புது பட்டியலை வெளியிடும். அந்த வகையில், இந்த முறை ஹூரன் பார்க்ளேஸ் உடன் இணைந்து இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 ஆம் ஆண்டு பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த வகையில் இந்தியாவின் மதிப்புமிக்க குடும்ப வணிகங்களின் 2024 பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடம் பெற்றுள்ளது. இந்த குடும்பத்தின் மதிப்பு ரூ.25.75 லட்சம் கோடியாகும். ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் அம்பானி குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

அம்பானி குடும்பத்தைத் தொடர்ந்து நீரஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குடும்பம் (ரூ. 7.13 லட்சம் கோடி) இரண்டாவது இடத்திலும், பிர்லா குடும்பம் (ரூ. 5.39 லட்சம் கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, அதானி குடும்பம் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில் உள்ள முதல் பத்து குடும்பங்களின் மொத்த மதிப்பு ரூ. 6,009,100 கோடியாகும், இது இந்தியாவில் குடும்பம் நடத்தும் நிறுவனங்களின் வலிமையை ஹூரன் பார்க்ளேஸ் காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது.
இதைத் தொடர்ந்து JSW ஸ்டீல் மற்றும் சுரங்கத் தொழில்களை நடத்தும் ஜின்டால் குடும்பத்தின் மதிப்பை ரூ. 471,200 கோடி உடன் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஷிவ் நாடார் குடும்பத்தின் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், சாப்ட்வேர் மற்றும் ஐடி சேவைத் துறையில் முக்கியமான நிறுவனமாகவும் ரூ. 430,600 கோடி மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, மகேந்திரா அண்ட் மகேந்திரா மூலம் ஆட்டொமொபைல் துறையில் அசத்தி வரும் மகேந்திரா குடும்பம் ரூ. 345,200 கோடி மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளது. 7வது இடத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் தானி குடும்பமும், 8வது இடத்தில் விப்ரோ-வின் ப்ரேம்ஜி குடும்பமும், 9வது இடத்தில் DLF-ன் ராஜீவ் சிங் குடும்பமும், 10வது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குடும்பமும் உள்ளது.
இந்த பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் 2024 மார்ச் 20 நிலவரப்படி கணக்கிட்டுச் சேர்க்கப்பட்டு உள்ளது. மதிப்பீட்டு முறையில் தனியார் முதலீடுகள் மற்றும் லிக்விட் சொத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதில் டாடா குழுமம் சேர்க்கப்படவில்லை என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம், டாடா குழுமம் டாடா சன்ஸ் என்னும் தொழிற்துறை வல்லுனர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. டாடா சன்ஸ் இல்லாமல் டாடா டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தால் டாடா குழுமம் ஒரு குடும்ப வர்த்தகமாக இருந்திருக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications