தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான், ஆனால் ஊழியர்களுக்கு இது கூடுதல் வருமானம் ஈட்டும் காலம். அதிலும் இந்தத் துறை ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் என்றே சொல்லக் கூடிய அளவுக்குச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டு FMCG மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டமாக மாறியுள்ளது.
FMCG மற்றும் உற்பத்தித் துறையைச் சார்ந்த பணியாளர்கள், பணியாளர் நிறுவனங்கள் மற்றும் மனித வள ஆலோசகர்கள் தங்களின் மாத சம்பளத்தில் சுமார் 20 சதவீதம் வரையில் போனஸ் தொகையைப் பெறலாம் எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.

பணியாளர் நிறுவனமான CIEL HR செய்த ஆய்வில், உற்பத்திப் பிரிவைச் சேர்ந்த 160 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் சுமார் 58 சதவீதம் பேர் இந்த ஆண்டுத் தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள் போனஸ் சுமார் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவாக வழங்கலாம் என CIEL HR நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் நாயர் இந்த ஆய்வின் முடிவுகளை வைத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி நிறுவனங்கள் பொறுத்த வரையில் தீபாவளி போனஸ் மிகவும் பொதுவானது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான போனஸ் ரூ 7,000 முதல் ரூ 10,000 வரை இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது.
போனஸ் என்பது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அவர்களின் கடின உழைப்புக்கு வெகுமதியாக வழங்கும் கூடுதல் ஊதியமாகும். நிறுவனங்கள் தீபாவளி போனஸ் வழங்குவது இந்திய சட்டத்தின் படி கட்டாயமில்லை. அதேவேளையில் இந்தப் போனஸ் தொகையை ஒரு ஊழியர் பெற சில தகுதிகளை நிர்ணயத்து அதன் அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்தத் தகுதிகள், நிபந்தனைகள் நிறுவனங்கள் மத்தியிலும், துறைகள் மத்தியிலும் மாறுபடும்.
கடந்த சில நாடுகளில் இந்தியாவில் வர்த்தகம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது மட்டும் அல்லாமல், நிறுவனங்களின் லாப அளவுகளும் கடந்த ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய சில ஆண்டுகளின் வழங்கப்பட்ட போனஸ் தொகையைக் காட்டிலும் நிறுவனங்கள் சிறப்பான போனஸ் வழங்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக FMCG மற்றும் ரீடைல் விற்பனை மற்றும் இ-காமர்ஸ் துறையில் ஊழியர்கள் சராசரியாகப் போனஸ் தொகை அவர்களின் சம்பளத்தில் 12 முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என்று ராண்ட்ஸ்டாட் இந்தியா அமைப்பின் சிசிஓ யேஷாப் கிரி கணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications