உலகின் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலை ஹுருன் குளோபல் 500 பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் 20 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 8 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 202 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் 34வது சந்தை மதிப்பில் இந்திய நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
ஆப்பிள் & மைக்ரோசாப்ட்
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.4 ட்ரில்லியன் டாலர் மதிப்புடனும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.8 ட்ரில்லியன் டாலர் மதிப்புடன் உள்ளது. கடந்த ஆண்டில் சிறந்த 500 நிறுவனங்கள் 11.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பானது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட அனைத்து மதிப்புகளும் இந்த ஆண்டில் இழப்பினை கண்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 139 பில்லியன் டாலராகும். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தை மதிப்பினை உடைய நிறுவனமாகும். கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் 4 நிறுவனங்கள் முதல் 500 இடங்களை பெற்றுள்ளது. இதில் அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் மதிப்பு 63 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உள்ளது.
நிதி சேவை சார்ந்த நிறுவனங்கள்
இதே டாப் 10 நிறுவனங்களில் ஆல்பாஃபெட் , அமேசான், டெஸ்லா, பெட்க்ஷயர் ஹாத்வே, ஜான்சன் மற்றும் ஜான்சன் எக்ஸான் மொபில் போன்ற நிறுவனங்கள், உலகின் டாப் 10 நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் நிதி துறையை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. நிதி துறையை சார்ந்த நிறுவனங்கள் மட்டும் 104 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. யுனைடெட் ஹெல்த் குரூப் மற்றும் விசா ஆகிய இரண்டு நிதி சேவை இருந்த நிறுவனங்களும் டாப் 10 இடங்களுக்குள் உள்ளன.
5 சிறந்த நிறுவனங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.36 ட்ரில்லியன் டாலர்
மைக்ரோசாப்ட் - 1.8 ட்ரில்லியன் டாலர்
ஆல்பாஃபெட் - 1.3 ட்ரில்லியன் டாலர் (1 இடம் முன்னேற்றம் கண்டுள்ளது)
அமேசான் - 1.2 ட்ரில்லியன் டாலர் (1 இடம் கீழாக இறங்கியுள்ளது)
டெஸ்லா - 672 பில்லியன் டாலர் (3 இடங்கள் முன்னேறி 5வது இடம்)
மீடியா & எண்டர்பிரைசஸ் இழப்பு
கடந்த ஆண்டில் மீடியா மற்றும் எண்டர்பிரைஸ் துறையானது மிகப்பெரிய இழப்பினை கண்ட துறைகளில் ஒன்றாக உள்ளது. மெட்டா நிறுவனத்தின் மதிப்பு 618 பில்லியன் டாலர் இழப்பினை எதிர்கொண்டது. இந்த ஆண்டில் 349 பில்லியன் டாலர் ஆக அதன் மதிப்பு உள்ளது.
பட்டியலில் வெளியேறிய நிறுவனங்கள்
ஜூம், ஸ்னாப் மற்றும் அடிடாஸ் ஆகியவை முதல் 500 நிறுவனங்களில் இருந்து வெளியேறிய நிறுவனங்களில் அடங்கும்.
சவுதி அராம்கோ மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் சந்தை மதிப்பு 2.03 ட்ரில்லியன் டாலராகும். இதே எஸ்பிஐ-யின் சந்தை மதிப்பு 62 பில்லியன் டாலராகும். எல் ஐ சியின் சந்தை மதிப்பு 45 பில்லியன் டாலராகும்.
பங்கு சந்தை நிலவரம் என்ன?
உலகளாவிய சந்தைகள் மோசமான சரிவினைக் கண்டுள்ளன. ஆனால் அதேசமயம் சென்செக்ஸ் 12% உயர்ந்துள்ளது. சீனாவின் சந்தை குறியீடுகள் மற்றும் ரஷ்யாவின் சந்தை குறியீடுகளும் சரிவினைக் கண்டுள்ளன. இது தவிர அமெரிக்கா, கொரியா மற்றும் ஷாங்காய், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பங்கு சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications