நாட்டில் பல முன்னணி ஐடி நிறுவனங்களும் தற்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சனை அட்ரிஷன் விகிதம் தான்.
அதிலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையினரின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்த அட்ரிஷன் விகிதமானது அதிகரித்துள்ளது மிக கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் விப்ரோ நிறுவனத்தில் கடந்த 90 நாட்களில் 20% ஊழியர்கள் தங்களது வேலையினை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஃபோசிஸ் அட்ரிஷன் விகிதம்
இது குறித்து வெளியான செய்தியில் விப்ரோ மட்டும் அல்ல, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக விப்ரோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டில் 20.5% அட்ரிஷன் விகிதம் அதிகரித்து காணப்படுகின்றது.
Array
மற்ற ஐடி ஜாம்பவான்கள் ஆன டிசிஎஸ் நிறுவனத்தின் 11.9% அட்ரிஷன் விகிதம் அதிகரித்தும், இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20.1% அதிகரித்தும், ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தில் 15.7% ஆகவும், இதே காக்னிசண்ட் நிறுவனத்தில் 33% ஆகவும் அதிகரித்துள்ளது.
திறமைக்கான தேவை
விப்ரோவின் தலைவர் மற்றும் சி.ஹெச்.ஆர்.ஓ செளரப் கோவில் கூறுகையில், அட்ரிஷன் விகிதம் என்பது தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் இருந்தாலும், திறமைக்கான தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது.
டிஜிட்டல் துறைக்கான தேவையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல ஒப்பந்தங்களை ஐடி நிறுவனங்கள போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணியமர்த்தலை அதிகரிக்கலாம்
அதெல்லாம் சரி இந்த அட்ரிஷன் விகிதத்தினை எப்படி சமாளிப்பது?
இதற்காக நிறுவனங்கள் முதலில் கையில் எடுப்பது பணியமர்த்தலை அதிகரிப்பது தான். தற்போது நிறுவனங்கள் இதில் தான் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் 2022 - 23ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Array
திறமையை மேம்படுத்துதல், நிறுவனத்திற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிப்பது. இது அசாதாரண நேரங்களில் ஊழியர்களை அதற்கேற்ப செயல்பட வழிவகுக்கும்.
மேலும் செயல்திறன் சார்ந்த கலாச்சாரத்துடன் சீரமைக்க இந்த ஆண்டு, பல சீர்திருத்தங்களை நிர்வாகம் செய்து வருகின்றது.
தக்க வைப்பு முயற்சிகள்
ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல வகையான போனஸ் திட்டங்கள், குறிப்பாக திட்டம் மாற்றம், போனஸ் சுழற்சி, அனைத்து ஊழியர்களுக்குமான MSI சுழற்சி, பதவி உயர்வு உள்ளிட்ட பல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஆக இது போன்ற பலவற்றின் மூலம் நிறுவனம் சவால்களை சம நிலைப்படுத்தி வருகின்றது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications