இந்திய அரசு அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் மிகப்பெரிய கிளவுட் சேவை நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய சலுகையை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது 30 வருடங்களுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தை மாற்ற வெளியான முக்கியமான அறிவிப்புக்கு இணையாக ஒரு அறிவிப்பு என்பது எத்தநனை பேருக்கு தெரியும்.
இந்த அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற கிளவுட் நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர் அமைத்து, உலக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கினால் 2047 வரை வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது 20 ஆண்டுகளுக்கு முழுமையான வரி விலக்கு (tax holiday) அளிக்கப்படும் என பட்ஜெட் அறிவிப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்த சலுகை எந்த நிபந்தனையில் கிடைக்கும்?
இந்த வரி விலக்கு இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது:
- இந்தியாவில் டேட்டா சென்டர் கட்ட வேண்டும்
- இந்தியாவின் மின்சாரம், தண்ணீர், நிலம் பயன்படுத்த வேண்டும்
- சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கிளவுட் சேவை வழங்க வேண்டும்
இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு இந்த வரி விலக்கு இல்லை. ஆனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கினால் முழு வரி விலக்கு கிடைக்கும்.
1991 சட்டம்
1991-இல் இந்தியா STPI (Software Technology Parks of India) திட்டத்தை தொடங்கியது. இந்தியாவில் இருந்து வெளிநாடுக்கு சாப்ட்வேர் சேவைகளை ஏற்றுமதி செய்யும் ஐடி நிறுவனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்தது. அதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் திறந்தன, ஊழியர்களை பணியமர்த்தினர். இதுவே பெங்களூரை உலக ஐடி தலைநகராக மாற்றியது. இப்போது அதே உத்தி கிளவுட் மற்றும் AI துறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
| மாநிலங்கள் | டேட்டா சென்டர் எண்ணிக்கை | சந்தைப் பங்கு (%) | முக்கிய நகரம் |
| மகாராஷ்டிரா | 85 | 53% | மும்பை |
| தமிழ்நாடு | 35 | 20% | சென்னை |
| உத்தரப் பிரதேசம் | 25 | 10% (என்.சி.ஆர்) | நொய்டா |
| கர்நாடகா | 30 | 7% | பெங்களூரு |
| தெலுங்கானா | 20 | 5% | ஹைதராபாத் |
தமிழ்நாட்டுக்கு பெரிய வாய்ப்பு
தமிழ்நாடு இந்தியாவின் மிகப்பெரிய ஐடி மையங்களில் ஒன்று. சென்னை, கோயம்புத்தூரில் ஏற்கனவே பல டேட்டா சென்டர்கள் உள்ளன. இந்த வரி விலக்கு அறிவிப்பால் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய டேட்டா சென்டர்களை அமைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு இந்தியாவின் மொத்த டேட்டா சென்டர் திறனில் 20% பங்கை வைத்திருக்கிறது. இது நாட்டின் இரண்டாவது பெரிய டேட்டா சென்டர் மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது.
தெற்கின் நுழைவாயில் - சென்னை
சென்னை இந்தியாவை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய இணைய நுழைவாயிலாக (gateway) உள்ளது. குறைந்த மின்சார கட்டணம் (competitive power tariffs) மற்றும் இரட்டை கிரிட் நம்பகத்தன்மை (dual-grid reliability) ஆகியவை சென்னையை டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கு மிகவும் ஈர்க்கும் இடமாக மாற்றியுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போதைய திறன்
தமிழ்நாட்டில் தற்போது 250 முதல் 300 மெகாவாட் வரை டேட்டா சென்டர் திறன் உள்ளது. இது விரைவில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நிறுவனங்கள்
NTT, CtrlS, STT GDC, Sify போன்ற உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெரிய டேட்டா சென்டர்களை இயக்கி வருகின்றன. இவை அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் கிளவுட் சேவைகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
மும்பை டேட்டா சென்டர் சந்தை
மும்பையில் தற்போது 550 - 600 மெகாவாட் வரை டேட்டா சென்டர் திறன் உள்ளது. இங்கு Yotta, STT GDC, Nxtra, AdaniConneX, Sify போன்ற முக்கியமான நிறுவனங்கள் உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ளத இப்புதிய சட்டத்தால் ஆயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் மின்சாரம், இண்டர்நெட் இணைப்பு, ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களும், நிறுவனங்களும் வேகமாக வளரும். ஐடி ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரும்.
இந்த வரி விலக்கு 2047 வரை நீடிக்கும் என்பதால் இது இந்தியாவை உலக கிளவுட் மற்றும் AI உற்பத்தி மையமாக மாற்றும் மிகப்பெரிய முடிவாகும்.


Click it and Unblock the Notifications