ஷூ அணியாவிட்டால் பணக்காரர் ஆகிவிடலாமா? இது என்ன புதுக் கதையா இருக்குது?

உலகில் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகளை கடைப்பிடிப்பது உண்டு. ஆனால் 20 வயது இளைஞர் ஒருவர் ஷூ அணியாமல் வெறும் காலில் நடப்பதால் பணக்காரர் ஆகிவிடலாம் என்று நம்புவது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணக்காரர் ஆவதற்கு பல்வேறு வழிகள் இருக்கும் நிலையில் இந்த இளைஞர் இதை எப்படி தேர்வு செய்தார் என்பதே அனைவரின் ஆச்சரியத்திற்கு காரணமாக உள்ளது.

இந்த இளைஞர் ஏன் இந்த முடிவை எடுத்தார்? இதன் மூலம் அவர் பணக்காரராக வாய்ப்பு உள்ளதா? என்பதை தற்போது பார்ப்போம்.

 ஷூ அணியாத 20 வயது இளைஞர்

ஷூ அணியாத 20 வயது இளைஞர்

20 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக வெறும் காலால் நடந்து வருகிறார். இதன் மூலம் அவர் தான் பணக்காரர் ஆகிவிடலாம் என்று உறுதியாக நம்புகிறார். அவர் நம்புவதற்கு காரணத்தை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

வெறுங்காலில் 10 மாதங்கள்

வெறுங்காலில் 10 மாதங்கள்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 20 வயதான ஜார்ஜ் வுட்வில்லே என்பவர் கடந்த 10 மாதங்களாக ஷூஅணியாமல் வெறுங்காலுடன் நடந்து வருகிறார். மேலும் தான் இறக்கும் வரை இனி ஷூ அணிய மாட்டேன் என்று வெறும் காலுடன் தான் நடப்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

விடுதலை

விடுதலை

ஒருமுறை குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்று திரும்பிய பிறகு அவர் தனது காலணிகளை தூக்கி எறிய முடிவு செய்தார். இதனால் அவர் விடுதலை பெற்றதாகவும் கூறுகிறார். அந்த நாள் முதல் இன்றுவரை அந்த இளைஞர் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், இரவு விடுதிகள், பார்கள் செல்லும்போது ஷூ அணியாமல் வெறும் காலுடன் தான் சென்று வருகிறார்.

புகைப்படங்கள் விற்பனை

புகைப்படங்கள் விற்பனை

டிக்டாக்கில் அவர் வெறுங்காலுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. இதன் மூலம் அவர் பிரபலமாகலாம் என்று முடிவு செய்கிறார். இந்த நிலையில் தான் சோர்வடையாமல் வெறுங்காலுடன் இருக்கும் புகைப்படங்களை விற்பனை செய்து குறைந்த கட்டணத்தை பெற திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம்தான் பணக்காரராக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

5 ஆண்டுகள் இலக்கு

5 ஆண்டுகள் இலக்கு

எனது அழுக்கு படிந்த கால்களின் புகைப்படத்தை நான் விற்பனை செய்வதால் ஒரு நாள் நிச்சயம் மில்லியனராக முடியும் என்று நம்புகிறேன் என்றும், இதற்காக 5 ஆண்டுகள் இலக்காக வைத்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஐந்து ஆண்டுகளில் நான் பணம் சம்பாதிக்க இல்லை என்றால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

 முதல் மாத வருமானம்

முதல் மாத வருமானம்

வெறுங்காலுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் டிக்டாக் மூலம் விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார். முதல் மாதத்தில் அவருக்கு £100 மட்டுமே புகைப்படங்கள் விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைத்தது என்றாலும், டிக்டாக்கில் கிடைத்த விளம்பரம் காரணமாக இன்னும் அதிகமான புகைப்படங்கள் விற்பனையாகும் என்றும் அதன் மூலம் எனக்கு மில்லியன் கணக்கான யூரோக்கள் பணம் கிடைக்கும் என்றும் அவர் மதிப்பிடுகிறார்.

எதிர்மறை விமர்சனங்கள்

எதிர்மறை விமர்சனங்கள்

என்னுடைய இந்த செயலுக்கு நேர்மறையான விமர்சனங்கள் மட்டுமின்றி எதிர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் சிலர் என்னை அருவருப்பாக பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் தெருவில் கடந்து என்னை கடந்து செல்லும் போது என்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றார்கள் என்றும் அவர் கூறுகிறார். மற்றவர்கள் நான் வெறும் காலுடன் நடப்பதை பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை என்றும், எனக்கு சுதந்திரமாக இருப்பதாக நான் நினைப்பதால் இதைத் தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

மேலும் வெறுங்காலுடன் பல்பொருள் அங்காடி உள்பட பல இடங்களுக்குச் செல்லும்போது மேலாளர்களால் நான் வெளியேற்றப்பட்டு உள்ளேன் என்றும் ஆனால் இதற்காக நான் ஒரு போதும் வெட்கப் படவில்லை என்றும் அவர் கூறினார். நான் நாகரீகமான முறையில் தான் மற்றவர்களிடம் நடந்து வருகிறேன் என்றும் என்னை உள்ளே அனுமதிக்காதவர்களிடம் நான் வாக்குவாதம் செய்யவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் உள்ளூரில் உள்ள கடைகளில் என்னை யாரென்று தற்போது அனைவருக்கும் தெரியும் என்றும் அதனால் நான் வெறுங்காலுடன் வந்தாலும் அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள் என்றும் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் என்னை மற்றவர்களும் அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றும் கூறினார்.

குளிர்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தில் மட்டும் வெறுங்காலுடன் நடப்பது சற்று கடினமாக இருந்ததாகவும் ஆனால் தற்போது பழகி விட்டதாகவும் அவர் கூறுகிறார். மேலும் குளிர் காலத்தில் முடிந்தவரை வெளியில் நடப்பதை தவிர்த்து வருகிறேன் என்றும் அவர் கூறுகிறார். வெறும் காலில் ஷூ இல்லாமல் நடப்பதன் மூலம் மில்லியனர் ஆகிவிடலாம் என்ற கனவில் இருக்கும் இளைஞருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+