இந்திய ரூபாய் இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் நாம் பயன்படுத்துவது போலவே பொது இடங்களில் இருக்கும் கடைகளில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டில் மற்றொரு நாட்டின் நாணயத்தை எளிதாக கொடுத்து பொருட்களையோ அல்லது சேவையையோ பெற முடியாது.
வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டு நாணயத்திற்கு மாற்றி அதன் பின்பு தான் பயன்படுத்த முடியும். ஆனால் சில நாடுகளின் நாணயம் மதிப்பு உயர கூடும், அதிகப்படியான நம்பிக்கை கொண்ட நாணயங்களை விற்பனையாளர்கள் தயக்கமின்றி வாங்குவது வழக்கம். அப்படிப்பட்ட நாணயங்களில் ஒன்று தான் அமெரிக்க டாலர், தற்போது அமெரிக்க டாலர் போலவே இந்திய ரூபாயை வெளிநாட்டு வியாபாரிகள் சர்வசாதாரணமாக வாங்குகிறார்கள்.
அதிலும் குறிப்பாக தென் ஆசிய பகுதியில் பல நாடுகள் இந்திய ரூபாய் நோட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் அந்நாட்டு legal tender Currency-க்கு இணையாக இந்திய ரூபாய் நோட்டுகள் பெறப்படுகிறது.
தி பூட்டானீஸ் பத்திரிக்கையின் ஆசிரியரான Tenzing Lamsang தனது டிவிட்டர் கணக்கில் இந்திய ரூபாய் குறித்தும் வெளிநாட்டில் இதன் மதிப்பு குறித்தும் ஒரு பதிவை செய்தார். இந்த பதிவு தற்போது பூட்டான் நாட்டு மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் இந்தியர்கள் மத்தியிலும் டிரென்டாகியுள்ளது.
Tenzing Lamsang தனது பதிவில், இந்தியர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம், பல வருடங்களாக தென் ஆசியாவில் இந்திய ரூபாயை பிராந்திய அமெரிக்க டாலராக கருதப்பட்டு பல நாடுகள் தங்களுடைய நாட்டின் நாணயமாகவே கருதி ஏற்றுக்கொள்கின்றனர். இது வெளிநாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பெரிய அளவில் பயன்படுவது மட்டும் அல்லாமல் அனைத்து இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு அதிகம் பயன் அளிக்கிறது.

உதாரணமாக பூட்டான் நாட்டில் பெரிய ஹோட்டல் முதல் கடைகள் வரையில் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருநாட்டு எல்லை பகுதியிலும் இந்திய ரூபாயில் தான் அதிகப்படியான வர்த்தகம் நடக்கிறது. இதேபோல தான் நேபாளத்திலும் இந்திய ரூபாய் பொரும்பாலான இடத்தில் பெறப்படுகிறது.
இதில் முதல் பிரச்சனை 2016ல் பிரதமர் மோடியின் பணமதிப்புழப்பு அறிவிப்பு மூலம் நடந்தது, பூட்டானில் அப்போது தொழிலதிபர்கள் முதல் சாமானிய மக்கள் முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தனர். Demonetisation அறிவிப்பை தொடர்ந்து பூட்டான் மக்கள் 500,1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் வரிசையில் நின்று விண்ணப்பம் சமர்பித்து வாங்க வேண்டிய நிலை உருவானது. இதனால் இந்திய ரூபாய் மீதான மதிப்பு பூட்டான் மக்கள் மத்தியில் குறைந்தது.
இதன் பின்பு பூட்டான் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை பெற துவங்கினர், இந்த நிலையில் mini demonetisation அறிவிப்பாக ஆர்பிஐ செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது என டிவிட்டரில் Tenzing Lamsang தெரிவித்தார்.
பூட்டான் நாட்டில் இந்திய வங்கிகள் இல்லை, பூட்டான் மத்திய வங்கியும் 2000 ரூபாய்க்கு இணையாக பூட்டான் நாணயத்தை அளிக்கும் வசதியை ஏற்பாடு செய்யவில்லை. இதனால் பூட்டான் மக்களிடம் இருக்கும் 2000 ரூபாய் தற்போது செல்லாகாசாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மற்றும் இந்திய ரூபாய் குறித்தும் புதிய புரிதல் பூட்டானுக்கு கிடைத்துள்ளது.
உலகளாவிய நாடாக மாற வேண்டுமென இந்தியா இலக்கு வைத்து வரும் வேளையில் தனது ரூபாயை குளோபல் ரிசர்வ் கரன்சியாக மாற்ற வேண்டும். ஆனால் அண்டை நாட்டிலேயே இந்திய ரூபாயை நம்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. ரூபாய் மீதான நம்பிக்கை மோசமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு உள்ளது என Tenzing Lamsang தெரிவித்தார்.

பூட்டான் மத்திய வங்கி 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றும் வசதியை அளிக்காமல் இருக்க முக்கிய காரணம் இந்திய ரிசர்வ் வங்கி தான். ஆர்பிஐ 100 ரூபாய நோட்டுகளை எவ்விதமான எண்ணிக்கை அளவுகளும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது, 200 மற்றும் 500 ரூபாயை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை RBI பூட்டான் மத்திய வங்கியிடம் இருந்து ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால் பூட்டான் வர்த்தகங்களும், மக்களும் இந்திய ரூபாய் மீதான நம்பிக்கையால் தொடர்ந்து பூட்டான் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளிடம் இருந்து ஏற்றுக்கொண்டு வந்தது என Tenzing Lamsang தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்திய ரூபாய் தற்போது பூட்டான், நேப்பாள், பங்களாதேஷ், இலங்கை நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மாலத்தீவுகளில் இந்திய ரூபாய்க்கு சிறப்பான எக்ஸ்சேஞ்ச் வேல்யூ உள்ளது எனவும் தனது ரீடிவீட்-ல் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications